“ப்ளானா? என்ன ப்ளான்???”
“பின்னே, கல்யாணத்துக்கு டேட் மட்டும் ஃபிக்ஸ் செஞ்சா எல்லாம் தானா நடந்திருமா என்ன? கல்யாண மண்டபம் தொடங்கி எல்லாத்தையும் அரேன்ஜ் செய்யனும்ல? அத்தைக்கு தெரிஞ்ச ஒரு வெட்டிங் பிளானர்ஸ் இருக்காங்க... அவங்க கிட்ட அத்தை பேசி இருக்காங்க... மண்டபம் ஏதாவது செட் ஆகுதா பார்ப்போம்... நாம அதுக்குள்ளே சாரீஸ் அது இது எல்லாம் வாங்கனுமே...”
“ஒசிமம், நானே இதை பத்தி பேசனும்னு நினைச்சேன்... என் கிட்ட அப்பாவோட இன்சுரன்ஸ் பணம் ஏழு லட்சம் கிட்ட இருக்கு... அம்மாவோட நகையும் இருக்கு...”
“நந்து, நான் இதை பத்தி எல்லாம் உன் கிட்ட கேட்கவே இல்லையே?”
“இல்லைடி, சரத் ஃபேமிலி எனக்காக இவ்வளவு நாள் செய்ததே அதிகம்... இதுக்கும் மேல அவங்க செய்ய, நான் அமைதியா இருந்தா நல்லா இருக்காது...”
“அடியே, அப்போ நான் யாரு? நான் சரத் ஃபேமிலில ஒருத்தி இல்லையா? உன்னை...!!!!!”
“கோபப் படாதேடி.... நீயும் அவங்க ஃபேமிலில ஒருத்தி தான்... ஆனால் அதையும் தாண்டி நாம இரண்டு பேரும் ஃப்ரென்ட்ஸ்.... எனக்கு நீ செய்றதும், உனக்கு நான் செய்றதும் வேற...”
“குட்... இப்போ இந்த கல்யாணத்துக்கு செலவு செய்ய போறது நான் தான்... அதனால நீ ஃபீல் செய்யாம இரு...”
“இல்லை ஒசிமம்...”
“இங்கே பார் நந்து, இதை நான் கடனா தான் செய்றேன்னு வச்சுக்கோ... உன் கையில இருக்க பணம் உன்கிட்டயே இருக்கட்டும்... பின்னாடி எப்போவாவது உனக்கு தேவை படலாம்... பத்திரமா வச்சுக்கோ... மத்தபடி கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் மிஸர்ஸ் பணக்காரி தானே...