விட்டு அவளும் அதையே செய்து தூங்க முயன்றாள்!
✽✽✽
“இந்தா நந்து... வெள்ளரிக்கா... கண்ணுல வை...”
துளசி நீட்டிய சிறிதாக வெட்டப் பட்ட வட்ட வடிவ வெள்ளரிக்க்காய்களை கையில் வாங்கிய நந்திதா,
“இது எதுக்குடி ஒசிமம்?” என்று புரியாமல் கேட்டாள்.
“கண்ணுக்கு கீழே டார்க் சர்க்கிள் வராம இருக்க...”
“டார்க் சர்க்கிலா? எனக்கு அதெல்லாம் இல்லையே???”
“இவ்வளவு நாள் இல்லை, இனிமேல் வராமல் இருக்கனுமே... நேத்து எத்தனை மணிக்கு தூங்கின நீ?”
“அதெல்லாம் ஷார்ப்பா பத்து மணிக்கு தூங்கிட்டேன்...”
“யார் கிட்ட கதை விடுற? உன்னோட உதய் சரத்க்கு ஃபோன் செய்தப்போவே பத்தரை மணி கிட்ட இருக்கும்... உன் கிட்ட பேசிட்டு தான் பேசி இருப்பான்... ஸோ, பத்தரை மணிக்கு மேல தூங்க படுத்து, ட்ரீம்ஸ் எல்லாம் முடிஞ்சு நீ தூங்க எப்படியும் பன்னிரெண்டு, ஒரு மணி ஆகி இருக்கும்...”
துளசியின் அந்த தூக்க அலசலை விட அவள் சொன்ன ‘உன்னுடைய’ உதய் மகிழ்ச்சியை கொடுக்க, கண்களில் கனவுடன் அமைதியாக அமர்ந்திருந்தாள் நந்திதா.
“என்னடி திரும்ப அதுக்குள்ளே ட்ரீம் லான்ட் போயிட்டீயா?? அந்த வெள்ளரிக்காயை கண்ணுல வச்சுட்டு அப்படியே நீ என்ஜாய் செய்... கனவெல்லாம் முடிஞ்சப்புறம் சொல்லு நாம ப்ளான் செய்யனும்...”