அங்கே பிரின்ட்டர் பக்கத்தில் நின்ருக் கொண்டிருந்த சினேகாவும் அக்ஷராவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தானாக அக்ஷராவின் முகத்தில் நட்பு மின்னும் புன்னகை ஒன்று தோன்றியது.
ஆச்சர்யத்துடன் பதிலுக்கு புன்னகை செய்தாள் சினேகா.
அதற்குள் ஆகாஷ் தன்னை சமாளித்துக் கொண்டு, “நீ என்னை டிஸ்டர்ப் பண்ணலை அக்ஷரா. திடீர்னுன்னு உன்னை பார்க்கவும் சர்ப்ரைஸா இருந்தது,” என்றான்.
மீண்டும் ஆகாஷ் பக்கம் பார்வையை திருப்பிய அக்ஷ்ரா,
“ஃபோன் பண்ணிட்டு வரலாமான்னு யோசிச்சேன் அஷ்... நீ தானேன்னு... வேண்டாம்னு அப்படியே கிளம்பி வந்துட்டேன்,” என்றாள்.
தன் சுழல் நாற்காலியை விட்டு எழுந்த ஆகாஷ், தன்னுடைய கோட்டை எடுத்து அணிந்துக் கொண்டே,
“அக்ஷரா, அப்படி உடனே கிளம்பி வந்தா, ஷீ வான்ட்ஸ் டு டாக்ன்னு அர்த்தம். வா சும்மா ஒரு ட்ரைவ் போயிட்டு வரலாம்,” என்று அக்ஷராவை அழைத்துக் கொண்டு நடந்தான்.
அறையை விட்டு செல்லும் முன் எவ்வளவு முயன்றும் சினேகா பக்கம் அவன் பார்வை செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை...
சினேகாவோ அக்ஷ்ரா இருந்த திசையில் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
என்னடா நடக்கிறது என்று ஆகாஷும் அக்ஷ்ரா பக்கம் பார்த்தால், அவளோ சினேகாவிற்கு கை அசைத்து பை சொல்லிக் கொண்டிருந்தாள்!!!
ஒருவேளை அவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பரிச்சயம் இருக்குமோ என்ற கேள்வி வந்த