(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

புரிந்ததால், அவசரமாக பார்வையை திருப்பினான் ஆகாஷ்... 

   

ஹுஹும் திருப்ப முயன்றான்...

   

அதற்குள் சினேகா இலகுவாக சேலை முந்தானையை இழுத்து செருகி விட்டு, படபடத்துக் கொண்டிருந்த இடது பக்க சேலையை வலது கையால் பிடித்து வைத்துக் கொண்டாள். அப்படியே இடது கையை நீட்டி அந்த பேப்பர்களை எட்டி எடுத்தாள்...

   

ஆகாஷின் உதடுகள் சத்தமில்லாமல் வாவ் என்று முணுமுணுத்தது!

   

இப்போது வலுக்கட்டாயமாக பார்வையை லேப்டாப் பக்கமாக திருப்பினான்..

   

சினேகா மீதிருந்த அவனின் மரியாதை பல பல மடங்கு அதிகமாகி போயிருந்தது... அதே நேரம் அவள் அவனின் மனதிற்கு இன்னமும் நெருக்கமாகி போனது போலவும் உணர்ந்தான்...

   

ஷி இஸ் ஸோ ஸ்வீட்! ஸோ ஸ்மார்ட்!

   

அந்த நேரத்தில் திடீரென அவனின் அறைக் கதவு பொறுமையில்லாமல் தட்டப் பட்டு, உடனே திறந்தது...

   

உள்ளே வந்த அக்ஷ்ரா, ஆகாஷ் முன் வந்து நின்று,

   

“ஹாய் அஷ்... உன்னை தான் பார்க்க வந்தேன்,” என்றாள் அவளின் வழக்கமான சிரிப்புடன்!

   

திடீரென அவள் ஆகாஷ் முன் அவள் வந்து நின்றதாலோ என்னவோ, ஆகாஷின் முகத்தில் மெல்லிய தடுமாற்றம் தெரிந்தது!

   

“என்ன அஷ்? உன்னை டிஸ்டர்ப் செய்துட்டேனா??? சாரி டா,” என்றவள் விழிகளை சுற்றி பார்த்தாள்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.