Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 19 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஐஸ்வர்யா ஃபோனில் வந்த அழைப்பை ஏற்று பேசவும், அவளிடம் சைகையில் ‘பை’ சொல்லி விட்டு நடந்தாள் சினேகா.
சியாமளாவிடம் கையில் இருந்த பிரின்ட்-அவுட்களை கொடுத்து விட்டு, அன்றைய வேலையைப் பற்றி சிறிது நேரம் பேசினாள்.
இறுதியாக, தன் சீட்டிற்கு திரும்ப சினேகா எத்தனிக்கும் போது,
“வரும் போது ஆகாஷ் சார் கிட்ட தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தீயா?” என்று அவளிடம் கேட்டாள் சியாமளா.
“இல்ல மேம், அவர் நான் வரதுக்கு முன்னாடியே கிளம்பிட்டார்...”
“ஓ, ஓகே...!”
“மேம், இந்த கம்பெனி ஆகாஷ் சாரோட அப்பாவுடையதா?”
“இந்த கம்பெனியா??? இல்லம்மா, முழுக்க முழுக்க ஆகாஷ் சார் உருவாக்கினது...”
“ஆனால் மேம்... இவ்வளவு சீக்கிரம் இவ்ளோ பெரிய கம்பெனியா வளர்ந்து இருக்கே...”
“எல்லாம் ஹார்ட் வொர்க்ல வந்தது சினேகா... ஆகாஷ் சாரோட அப்பா தனியா பிஸ்னஸ் செய்றார்... இவரு படிச்சு முடிச்சப்புறம் from the scratch எல்லாம் தனியா செய்யனும்னு அஸ்வத் சார் கிட்ட ட்ரெய்னிங் எடுத்து இந்த கம்பெனியை ஸ்டார்ட் செய்தார்... கம்பெனி ஆரம்பிச்ச பணம் கூட பாங்க்ல லோன் வாங்கினது தெரியுமா?”
“ஓ!”
“ஆச்சர்யமா இருக்குல்ல, நிறைய பேருக்கு இதெல்லாம் தெரியாது... ஏதோ ஆகாஷ் சார் பார்ன் வித் சில்வர் ஸ்பூன்னு நினைப்பாங்க... நிறைய பேர் அப்படி தான்... ஆனால் ஆகாஷ்