Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 49 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”என்ன சார் நீங்க, தில்லை சாகலைன்னு அந்த பொண்ணும் சிதம்பரமும் உறுதியா நினைக்கறாங்களே சார்”
”ஆமாம்”
”ஆஸ்பிட்டல்ல இருந்த டெட்பாடி தில்லையோடது இல்லைன்னு, அந்தப் பொண்ணு சரியா சொல்லுதே சார், இனி என்ன செய்றது”
“கவலைப்படாத நான் திட்டம் போட்டு வைச்சிருக்கேன்”
”அப்ப அந்த டெட்பாடி யாரோடது சார்“
”அது தில்லையோடதுதான்”
”தில்லையோடதா என்ன சார் குழப்பறீங்க”
”இதப்பாரு சம்யுக்தாவோட புருஷன் தில்லையிருக்கானே அவன் ரவுடியானது எப்படின்னு உனக்கு தெரியாது, தெரிஞ்சா இந்த கேள்வியை நீ கேட்டிருக்க மாட்ட”
”அப்படின்னா புரியலையே சார்”
”அப்படின்னா ஆஸ்பிட்டல்ல இருக்கற டெட்பாடி யாரோ கிடையாது அவன்தான் அம்பலத்தான், அவனை கொன்னுட்டு அந்த இடத்தில வந்தவன்தான் நம்ம தில்லை புரியுதா”
”சரியா போச்சி, ஏன் சார் இப்ப தில்லை எங்கதான் இருக்காரு, உயிரோட இருக்காரா செத்துட்டாரா”
”அவன் செத்துட்டான் அது தெரியாம சம்யுக்தாதான் நம்பிக்கையா இருக்கா”
”அவங்களை எப்படி சார் சமாளிக்கறது”