பண்ணிடு, நான் அவள் சொல்ற கதையை கேட்கனும், அவள் சொல்ற கதையில தில்லைக்கு எதிரா இருக்கற ஆதாரத்தையும் அவனைப் பத்தின தடயத்தையும் எதையும் விட்டு வைக்க கூடாது அழிச்சிடனும்“
”நீங்கதான் மொத்தமா அழிச்சிட்டீங்களே சார்”
”எனக்கும் தெரியாம ஏதாவது இருக்கலாமே”
”இருக்கும் சார் இருக்கும் ஆனா, அந்தப் பொண்ணு எப்படி சார் இவ்ளோ ஞாபகமா நடந்ததை அப்படியே சொல்லுது”
”அவள் புத்திசாலி”
”ரொம்ப கெட்டிக்காரியா இருக்கா சார், பார்த்தீங்கள்ல அவங்களுக்காக சிதம்பரம் சார் கொந்தளிச்சது, ஒரு நிமிஷம் நானே ஆடிப்போயிட்டேன் சார் மனுஷன் இந்தளவுக்கு குதி குதின்னு குதிப்பார்ன்னு நான் எதிர்பார்க்கலை சார்“
”அதான் எனக்கும் சந்தேகமா இருக்கு, இந்த ஊருக்கு அந்தாளு வந்தே 3 நாள்கூட ஆகலை, அதுக்குள்ள தில்லை கேஸ்ல இவ்ளோ தூரம் கோபப்பட என்ன இருக்கு, இந்த சம்யுக்தாவுக்காக பரிஞ்சி பேசறதா நினைச்சேன் ஆனா, இல்லை ஏதோ தப்பா இருக்கு, அந்த சிதம்பரம் யாருங்கற விவரம் எனக்கு தெரியனுமே”
”அதுக்கென்ன சார், அவரை பத்தின எல்லா விவரத்தையும் நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்”
”நீ ஆதாரங்களை அனுப்பி வை, உனக்கு தேவையான பணம் உன் வீடு வந்து சேரும்”
”சரிங்க சார் அப்புறம்” என இழுக்க
”என்னய்யா இழுக்கற சீக்கிரமா சொல்லு வேற ஏதாவது பிரச்சனையா”