”அதை நான் பார்த்துக்கிறேன்”
”அப்ப தில்லையை கொன்னது யார் சார், அவனோட எதிரியா இல்லை போலீசா”
”அவனோட உயிர் நண்பனே தில்லையை கொன்னுட்டான்”
”அப்ப அந்த போலீஸ் ஆபிசர் சிவாவும் அவரோட பொண்டாட்டி டாக்டரம்மாவும் இன்னும் உயிரோடதான் இருக்காங்களா சார்”
”ஏன் கேட்கற”
”சொல்லுங்க சார்”
”அவங்க பத்திரமா இருக்காங்க”
”அதான் எங்க இருக்காங்க சார்”
”அவங்களை நாடு கடத்தியாச்சி, ஏதோ ஒரு வெளிநாட்டுல நிம்மதியா இருக்காங்க, இப்ப எதுக்கு அது உனக்கு”
”ஏன்னா சிதம்பரம் சார் அந்த டாக்டரையும் சிவா சாரையும் கண்டுபிடிக்கனும்னு உறுதியா இருக்காரு, அதனால கேட்டேன்”
”அவன் எங்க தேடினாலும் அவங்க கிடைக்க மாட்டாங்க”
”இந்த சம்யுக்தா பொண்ணை என்ன செய்றது சார், அவங்க இந்த கேஸை விடமாட்டாங்க போல இருக்கே”
”அதை நான் பார்த்துக்கிறேன் மறுபடியும் சம்யுக்தா கதை சொல்ல ஆரம்பிச்சா உடனே போன்