Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 48 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
”ஆபிசர் ப்ளீஸ் அப்படி செய்யாதீங்க எனக்கு தில்லை வேணும்”
”ஏன் வேணும்? எதுக்காக அவன் உங்களுக்கு வேணும், ஓ தாலி கட்டியதால பண்பாடு கலாச்சாரம்னு அந்த கெட்டவனோட வாழ ஆசைப்படறீங்களா என்ன”
”ஆபிசர் கொஞ்சம் அமைதியா இருங்க ப்ளீஸ்”
”போதும் சம்யுக்தா, என்னால இதை தாங்கவே முடியலை, உங்க அனுமதியில்லாம உங்க மேல இரக்கப்பட்டுக்கூட அவன் தாலிகட்டலை, கோபத்தில உங்களை பழிவாங்கனும்ங்கற எண்ணத்தில திட்டம் போட்டு தாலி கட்டியிருக்கான், அவன் மேல கேஸ் போட்டு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டி எதுக்கு அவ்ளோ கஷ்டம் அவனை என்கவுன்டர் செய்யனும்” என்றான் கோபமாக, அதைக்கேட்ட சம்யுக்தாவின் கண்கள் கலங்கிவிட்டது. கைகூப்பி சிதம்பரத்திடம் கெஞ்சினாள்
”ப்ளீஸ் ஆபிசர் அப்படி செய்யாதீங்க ப்ளீஸ், அவர் என் புருஷன்”
”இது ஒரு கல்யாணம், இந்த கல்யாணத்துக்காகவா தில்லையை புருஷனா ஏத்துக்க நினைச்சீங்க, முட்டாளா நீங்க, படுமுட்டாளா இருக்கீங்க, உங்களை அந்த தில்லை தன்னோட சுயநலத்துக்காக பயன்படுத்திக்கிட்டான். யாராவது இப்படி கூடவா நியாயம் செய்வாங்க, என்னால இதை ஒத்துக்க முடியாது சம்யுக்தா, நீங்களும் அவனை புருஷனா நினைக்காதீங்க அதான் நல்லது” என சொல்ல சம்யுக்தாவோ தன் தந்தையை பாவமாக பார்க்க அவரோ அவளை கண்களாலேயே அமைதி என சமாதானம் செய்துவிட்டு சிதம்பரத்திடம்
”சார் நாங்க இப்ப கிளம்பறோம், உங்க கோபம் தணிஞ்சதும் நாங்க வர்றோம் நன்றி” என சொல்லிவிட்டு தன் மகளை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினார். ஆனால் அறைக்கு வெளியே இருந்த போலீஸ் துறையை சார்ந்தவர்களோ அவளைக் கண்டு ஏளனமாகச் சிரித்தார்கள். அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சம்யுக்தாவை விட சிதம்பரம்தான் கோபத்தில் பொங்கினான். அதிலும் அங்கு இருந்த ஒரு குற்றவாளி அவளைப் பார்த்து
”புருஷன் பெரிய யோக்கியன்னு அவனை போய் தேடறீங்களே, செத்தானா சந்தோஷம்னு