நினைச்சிக்கிட்டு போகாம இவ்ளோ தூரம் வந்திருக்கீங்களே, இதுல பூவும் பொட்டோட இருக்கீங்க, புருஷன் செத்தாலும் மங்களகரமா இருக்கனுமா என்ன, இப்படியெல்லாம் எந்த ஊர்ல நடக்குது” என சொல்ல அவளோ அவனிடம்
”என் புருஷன் ஒண்ணும் சாகலை, உயிரோடதான் இருக்காரு காணாம போயிட்டாரு, சீக்கிரமா கிடைச்சிடுவாரு”
”காணாம போறதுக்கு அவன் என்ன குழந்தையா, உன்னை வேணாம்னு நினைச்சித்தான் விட்டுட்டு போயிருக்கான், நீயும் அவனை விடாம தேடிக்கிட்டு இருக்கியே முட்டாளா நீ” என அங்கு வேலை செய்த ஏட்டு சொல்ல அதற்கு அவளோ
”உங்க பார்வைக்கு நான் முட்டாளா தெரிஞ்சா அதைப்பத்தி எனக்கு கவலையில்லை, என் புருஷன் எனக்கு கிடைப்பாரு”
”யாரு அந்த ரௌடி பயலா, இந்த ஊர்ல இருக்கற எல்லா ரௌடிகளையும் கொன்னு இந்த ஊரையே ஆளனும்னு நினைச்சான், கடைசியில என்னாச்சி போலீஸ் கையாலயே செத்தான்”
”இல்லை அது ஒண்ணும் என்கவுன்டர் கிடையாது, அவரை போலீஸ் கொல்லலை, அவரோட எதிரிங்கதான் கொலை செய்ய முயற்சி பண்ணாங்க எனக்குத் தெரியும்”
”எப்படி தெரியும் நேர்ல பார்த்த மாதிரி சொல்றீங்களே” என ஏட்டு கேட்க அதற்கு சம்யுக்தா
”நேர்ல நான் பார்க்கலை ஆனா, தன்னோட எதிரியை கொல்லனும்னு அவர் என்கிட்ட சொல்லிட்டு போனாரு”
”உண்மையிலயே தில்லையை கொன்னது போலீஸ்தான்”
”இல்லை அவர் சாகலை உயிரோடதான் இருக்காரு, நான் அவரை தேடி கண்டுபிடிப்பேன்”
”உன்னால அது முடியாது, பேசாம வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்க, அதான் உனக்கு நல்லது”