”அப்படி ஆகாம நான் பார்த்துக்கிறேன், நீ மட்டும் எனக்கு உதவி செய்தா போதும்”
”நிச்சயமா சார் என்ன செய்யனும்னு சொல்லுங்க”
”தில்லை செத்துட்டான்னு சம்யுக்தா நம்பினாதான், இந்த உலகமே நம்பும்”
”இப்பவே உலகம் தில்லை செத்துட்டதாதானே நம்புது சார்”
”இல்லை அந்த சிதம்பரம் நம்பலை ஆமா அவனுக்கு என்ன பிரச்சனை, எதுக்காக இந்த கேஸ் விசயத்தில ரொம்ப சவுண்டு தர்றான்.”
”சார் அதான் எனக்கும் புரியலை, புது ஆளு சார், என்ன எப்படின்னு எனக்கே இன்னும் தெரியலை சார்”
”சரி கவனமா கேளு, சிதம்பரம் என்ன கேட்டாலும் இல்லைன்னு சொல்லு”
“எதை சொல்றீங்க சார்“
”தில்லை கேஸ் விசயமா சம்யுக்தா சொன்ன கதையிருக்கே அதுல இருந்து ஏதாவது ஆதாரம் கேட்டு வைப்பான், எதைக் கேட்டாலும் இல்லைன்னு சொல்லிடு”
”நீங்கதான் எல்லா ஆதாரத்தையும் அழிச்சிட்டீங்களே சார்”
”அது உண்மைதான், இருந்தாலும் அந்த சிதம்பரம் விடமாட்டான். தில்லையை கொல்ற அளவுக்கு முடிவோடு இருக்கானே, அவனை சுலபமா நினைக்காத அவனால கண்டிப்பா பிரச்சனை வரும்”
”ஏற்கனவே சம்யுக்தா மேடமால பிரச்சனை வந்துடுச்சே”
”ஆமாம் சம்யுக்தா இந்தளவுக்கு பிரச்சனையை உருவாக்குவாள்ன்னு நான் எதிர்பார்க்கலை“