தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 13 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
தம்பியை ஒரு பார்வை பார்த்து விட்டு, பின் ரோஹினியை பார்த்து முறைத்துக் கொண்டே,
“விருந்தாளின்னா, விருந்தாளி மாதிரி நடக்கனும்! நம்ம அம்மா இந்த மஹாராணிக்கு மரியாதை கொடுத்து பேசனுமாம், இந்தம்மாவோட பெட்டியை ஒருத்தர் தூக்கிட்டு வரணுமாம்! அதெல்லாம் போதாதுன்னு நம்ம அம்மா நேத்து தரைல பாய் போட்டு தூங்குறாங்க. ஏன்னு கேட்டா இந்த மஹாராணி தனியா படுத்து தூங்க மாட்டாங்களாம்!!! ஆனால் பெட்ல தான் படுத்து தூங்குவாங்களாம்! இவ எந்த வீட்டு ராணியா இருந்தா எனக்கு என்ன வந்துச்சு? என் அம்மாவை தொல்லை செய்யாம இருக்க சொல்லு, ” என அஜய் படபட என பொரிந்து தள்ளவும், ரோஹினி பாவமாக விழித்தாள்!
விஜய்க்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. ஆனால் அண்ணனிடம் அதை பற்றி சொல்வது வீணான வேலை என்பது புரிந்ததால், ரோஹினிக்காக பரிந்து எதுவும் சொல்லாமல் அப்போதைக்கு அமைதியாக இருந்தான்.
ஃபைனல் டச்சாக ரோஹினியை பார்த்து ரொம்பவும் எக்ஸ்ட்ரீமான கோப பார்வை ஒன்றைக் கொடுத்த அஜய், பின் தம்பி பக்கம் கவனத்தை திருப்பினான்!
“என்னடா விஜய், நிரஞ்சனா இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்டாளா??? ஆளைக் காணும்?”
ரோஹினிக்கு சப்போர்ட் செய்யவும் முடியாமல், அண்ணனுக்கு பதிலும் சொல்ல முடியாமல் இருந்த விஜய், அண்ணனே பேச்சை மாற்றவும், சட்டென்று அதை பிடித்துக் கொண்டான்!
“ஆமா, நிரு ஊருக்குப் போறா... அதனால சீக்கிரமே கிளம்பிட்டாண்ணா...”
“அவ இருந்தா அவளைப் பார்த்தாவது சில பேரை மரியாதைன்னா என்னன்னு கத்துக்க சொல்லலாம்...”
ரோஹினியை குறிப்பாக பார்த்தபடி அஜய் அதை சொல்ல, அப்போது சாரதா அங்கே வந்தாள்.
“எதுக்குடா எப்போவும் ரோஹினியை ஏதாவது சொல்லிட்டே இருக்க? பெரிய பாடி பில்டர்னு