பீத்திப்ப, ஒரே ஒரு சூட்கேஸை தூக்கிட்டு நீ செய்ற அலப்பறை இருக்கே... அப்பப்பா...”
பதில் ஒன்றும் சொல்லாமல் சாரதா கொடுத்த டீயை வாங்கி ஒரேடியாக குடித்து முடித்தான் அஜய்! அவனின் கையில் இருந்த டம்ப்ளரை வாங்கி விட்டு,
“நீ போய் ரெஸ்ட் எடு அஜய்... நான் சீக்கிரமா சமைச்சு முடிச்சுட்டு உன்னை கூப்பிடுறேன்,” என்று சொல்லி அவனை அங்கே இருந்து அனுப்பி வைத்தாள் சாரதா!
அஜய் போக காத்திருந்து விட்டு, பின் ரோஹினியிடம்,
“ரோஹினிம்மா... நான் மசாலா வறுக்கனும்... புகை வரும்.. உனக்கு ஒத்துக்காது.. நீ இங்கேயே இரு,” என்ற சாரதா, இளைய மகனிடம், “விஜய், ரோஹினியோட பேசிட்டு இரு... பாவம், உன் அண்ணன் மிரட்டின மிரட்டல்ல பயந்திருப்பா... நீயாவது ஜாலியா அவ சிரிக்குற மாதிரி பேசு,” என்றும் சொல்லி விட்டு சென்றாள்!
விஜய் ரோஹினியை பார்த்தான். அம்மா சொன்னது உண்மை என்று அவனுக்கு தோன்றியது!
எனவே பொதுவாக பேச்சை ஆரம்பித்தான்!
“ரோஹினி... உன் அம்மா, அப்பா எங்கே இருக்காங்க??”
“எனக்கு அம்மா, அப்பா இல்லை... யாருமே இல்லை,” என்றாள் ரோஹினி வருத்தத்தை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே!
அம்மா, அப்பா இருவருமே இல்லையா??? விஜயின் மனம் உருகிப் போனது.
அதுவும் ரோஹினி சொன்ன விதத்தில் அவனின் மனம் இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக உருகியது!!!!
"அஜயை பத்தி யோசிக்காதே ரோ! அவனை கவனிச்சுக்கலாம்... நீ ஃப்ரீயா இரு," என்று பெரிய