(Reading time: 7 - 14 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

அவனை விட்டு தள்ளு... நீ சொல்லு, உனக்கு என்ன பிடிக்கும்?” என வினவினான் விஜய்!

   

யோசனையில் இருந்து வெளி வந்த ரோஹினி, விஜய் சொன்னதை கேட்டு எழுந்த மெல்லிய புன்னகையுடன், “எனக்கு... எல்லாமே பிடிக்கும்,” என்றாள்!

   

“இப்படி நைஸா எல்லாம் பதில் சொல்ல கூடாது ரோ! இப்போ என்னை கேட்டா, எனக்கு குச்சி ஐஸ், குல்ஃபி பிடிக்கும்... அந்த மாதிரி உனக்கு என்ன பிடிக்கும்???”

   

“அது என்ன குச்சி ஐஸ், குல்ஃபி???”

   

“என்னது, உனக்கு குச்சி ஐஸ்னா என்னனே தெரியாதா??”

   

“ஹுஹும்...”

   

“எந்த ப்ளானட்ல இருந்து வந்த நீ??? ஆஹா, இதெல்லாம் தெரியாம இருக்கவே கூடாது ரோ! நான் உனக்காகவே ஐஸ் வாங்கிட்டு வரேன்...”

   

ரோஹினி பதில் சொல்ல வாயை திறக்கும் முன்பே அங்கிருந்து காணாமல் போயிருந்தான் விஜய்!

   

போன வேகத்தில், அடுத்த மூன்றாம் நிமிடம் திரும்பி வந்தவன், சொன்னது போலவே கையில் கலர் கலரான குச்சி ஐஸ்களுடன் வந்தான்!!!

   

“உனக்கு எந்த கலர் வேணும் ரோ? அம்மாக்கு பிங்க், அண்ணனுக்கு ப்ளூ... உனக்கு???”

   

“எனக்கு... எதுவா இருந்தாலும் ஓகே??”

   

“இப்படி எல்லாம் சொல்லக் கூடாதுன்னு சொன்னேனா? உனக்கு பிடிச்சதை சொல்லு...”

   

“சரி... ம்ம்ம்... ரெட் கலர் தாங்க...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.