அவளிடம் சிவப்பு நிற ஐஸை கொடுத்த விஜய், அம்மா, அண்ணனுக்கும் அவரவர் குச்சி ஐஸை கொடுத்து விட்டு, மீண்டும் ரோஹினியிடம் வந்தான்.
“வா, இங்கே உட்கார்ந்து இதெல்லாம் சாப்பிடக் கூடாது...”
“ஏன் அப்படி?”
“வா ரோ... நான் சொல்றேன்...”
ரோஹினியை கட்டாயப் படுத்தி உடன் அழைத்துக் கொண்டு சென்றான் விஜய்...
வீட்டின் பின்புறம் திண்ணைப் போல இருந்த இடத்தில் சுவரில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டு, காலை ஹாயாக நீட்டியவன்,
“இப்படி உட்கார்ந்து ரசிச்சு, ருசிச்சு சாப்பிடனும் ரோ,” என்றான்.
ரோஹினிக்கு தரையில் அமர்ந்தே பழக்கம் இல்லை... இதில் எங்கிருந்த அவள் காலை நீட்டிக் கொண்டு அமர???
அவள் திரு திரு என விழிக்க,
“உட்காரு ரோ,” என்றபடி அவளின் கையை பற்றி அவன் பக்கத்தில் உட்கார வைத்தான் விஜய்.
வேறு வழி இல்லாமல், விஜய் பக்கத்தில் உட்கார்ந்து, அவனை காப்பி அடித்து காலை நீட்டிக் கொண்டு, சுவரில் சாய்ந்துக் கொண்ட ரோஹினி... அவனைப் போலவே உருகி கொண்டிருந்த அந்த குச்சி ஐஸை சாப்பிட முயன்றாள்...
அதன் சுவை பிடித்ததோ இல்லையோ, அந்த அனுபவம் அவளுக்கு புதுமையாக தான் இருந்தது!