மனிதனாக அவளுக்கு அனுமதியும் வழங்கினான்.
அவன் அப்படி ஈசியாக அவளின் பெயரை சுருக்கி அழைத்தது ரோஹினிக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
ஓ.. அவள் இப்போது இளவரசி இல்லையே... இந்த வீட்டின் கெஸ்ட்...
இதை மட்டும் அவள் விமான நிலையத்திலேயே உணர்ந்திருந்தால் அஜயின் கோபத்திற்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம்!
அஜயை பொறுத்தவரை அவள் மரியாதை தெரியாதவள்... அவனின் அம்மாவை தொல்லை செய்ய வந்தவள்...
ரோஹினிக்கு அஜயின் கோபத்திற்கான காரணம் புரிந்ததால் அவன் மீது கோபப் பட முடியவில்லை! சாரதா மீதிருக்கும் அன்பினால் தானே அவன் கோபப் படுகிறான்...
ஒரு சில வாரத்திற்கு முன்பாக இருந்திருந்தால் ரோஹினி கோபப்பட்டு கொதித்திருப்பாள், சிணுங்கலாக பேசி இருப்பாள்... ஆனால் இப்போது அவளின் மனம் பொறுமையாக அலசி ஆராய்ந்தது! அதனால் நடப்பவற்றுக்கு பின்னால் இருப்பவற்றை பற்றியும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது!
வாழ்க்கை அனுபவங்கள் தான் மன முதிர்ச்சியை கொடுக்கும் என்பது எத்தனை உண்மை!
அரண்மனையில் ரோஷன், விக்ரம் தொடங்கி கலா வரையில் அனைவருமே அவளால் முடியுமா ஏன்று சந்தேகப் பட்டதற்கான காரணம் அவளுக்கு இப்போது புரிந்தது!
இனிமேல் எதை...
அவளின் யோசனையை தடுப்பது போல, “என்ன ரோ, இன்னும் அண்ணனை பத்தியே யோசிக்குறீயா? அவன் அப்படி தான்! எதுக்கு எடுத்தாலும் உலகமே அவன் மேலே சுத்துற மாதிரி யோசிச்சு குதிப்பான்... அவன் பெரிய பர்ஃபெக்ட் பரமசிவம்னு அவனுக்கு நினைப்பு!