செய்ததை ஆகாஷிடம் அப்படியே ஒப்பித்தாள்...
“கணேஷ் செஞ்சதுல தப்பு எதுவும் இல்லையே அக்ஷு... அந்த பசங்களுக்கு அது தேவை தான்,” என்றான் ஆகாஷ்!
“அவங்க திரும்ப பழி வாங்குறேன்னு என்னை தேடி வந்துட்டா என்ன செய்றது அஷ்???”
“அந்த மாதிரி அவங்க கண்டுப்பிடிக்க முடியாத மாதிரி தானே கணேஷ் அடிச்சிருக்கான்... மத்தபடியும் உனக்கு தான் இப்போ ஒரு பாடி கார்ட் இருக்காரே...”
“இருந்தாலும் அஷ், நானே maritial art ஏதாவது கத்துக் கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது...”
“குட் அக்ஷு... செய்யலாமே,” என்று சொன்ன ஆகாஷின் மனதில் சினேகாவின் முகமும் வந்து போனது... அவளும் பாதுகாப்பிற்கு இப்படி எதையாவது படிக்கலாமே...!
அக்ஷ்ராவின் பதில் அவனின் யோசனைக்கு தடை போட்டது.
“ஆனால் இந்த வயசுல நான் அதெல்லாம் படிக்க முடியுமா அஷ்???”
“ஏன் உனக்கு என்ன எழுபது வயசாயிடுச்சா??? சரியான லேஸி கூஸ்டி நீ! ஏதாவது marital art சென்டர் உனக்கு தெரியுமா???”
“இல்லடா...”
“அப்போ இரு... நான் பார்க்குறேன்...”
தன் ஸ்மார்ட் ஃபோனில் தேடி, ரெவ்யூக்கள் படித்து, அக்ஷ்ரா வீடு பக்கத்தில் இருந்த ஒரு சென்டரை தேர்வு செய்தான் ஆகாஷ்! அத்தோடு விட்டு விடாமல் அவளை அவனே அங்கே அழைத்து சென்றான்.
சென்டரில் விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டு, அக்ஷ்ராவிற்கு தோதான நேரத்திற்கு