தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 48 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
அடுத்த சில நிமிடங்கள் தோழிகள் நடுவே நல விசாரிப்புகள், கலாட்டாக்கள் என்று கலகலப்பாக சென்றது...
“ஸோ, செப்டம்பர் ஒன்பதாம் தேதி கல்யாணம்?” என வினவினாள் மனுஜா.
“ஆமாம்... நீங்க மூணு பேரும் ஒழுங்கு மரியாதையா பத்து நாளைக்கு முன்னாடியே இங்கே வரீங்க.... புரிஞ்சுதா,” என்றாள் துளசி!
“என்னடி துளசி இதெல்லாம் நீ சொல்லனுமா... உனக்காக இல்லைனாலும், நந்திதாவுக்காக இல்லைனாலும், சீனியர் சரத்தை பார்க்க நான் வர மாட்டேனா?”
“கரக்ட்டுடி மனு... நம்ம சூப்பர் ஸ்டாரை பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு... கல்யாணத்துக்கு அப்புறமும் அதே போல ஸ்மார்ட்டா இருக்காரா ஒசிமம்?”
கிட்டத்தட்ட காதில் புகை வர நின்ற துளசியை பார்த்து நந்திதாவிற்கு சிரிப்பு வந்தது...
அவர்களின் கல்லூரியில் சரத் மிகவும் பிரபலம்... அவனுக்கு என்று ஒரு சின்ன பெண்கள் ரசிகர் மன்றமே இருந்தது....!
கல்லூரி நாட்களில், அவ்வப்போது இது போல எதையாவது சொல்லி துளசியை வெறுப்பேற்றுவது அவர்களின் பொழுதுபோக்கு....
அதெல்லாம் நந்திதாவிற்கு மறந்தே போயிருந்தது..!
“நீங்க எல்லாம் வரது நந்துவோட கல்யாணத்துக்கு.... அதை ஞாபகம் வச்சுக்கோங்க,” என கடுப்பாக சொன்னாள் துளசி.
“அதனால என்ன ஒசிமம்... சைட்ல இதுவும் இருக்கட்டும்...”
“மனு....”