(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 50 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

லோ சார் ஹலோ” என கான்ஸ்டபிள் பேசி போனை பார்க்க அது கட்டானது தெரியவும்

   

”ஓ போனை வைச்சிட்டாரா, யாரோ என்னவோ நமக்கு பணம் கொடுத்து வாழ வைக்கறாரு, யார்ன்னு தெரியலைன்னா என்ன, அவர் சொன்ன வேலையை செய்யலாம், கடவுள் மாதிரி உதவி செய்றவரை எதுக்காக பகைச்சிக்கனும், கடவுளை நாம நேர்லயா பார்க்கறோம், அதே போல இவரையும் பார்க்காமலே விசுவாசமா நடந்துக்கலாம், அப்ப நம்ம வாழ்க்கையும் நம்ம குடும்பமும் செழிப்பா இருக்கும் 

   

அந்த தில்லை உயிரோட இருந்தப்ப கூட இவ்ளோ பிரச்சனை வரலையே, செத்துப் போன தில்லையால இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வருமோ, அவன் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அழிச்ச கையோட இந்த சம்யுக்தாவையும் விரட்டியிருந்தா முடிஞ்சிருக்கும், அப்ப விட்டு இப்ப பிடிச்சி என்ன லாபம், முதல்ல இந்த சிதம்பரம் சாரை பத்தின தகவலை தேடிபிடிச்சி சாருக்கு அனுப்பலாம் பணமாவது கிடைக்கும் எவன் என்ன ஆனா நமக்கென்ன” என நினைத்துக் கொண்டே சிதம்பரத்திடம் செல்ல அதற்குள் சிதம்பரமோ ஓரளவு தனது கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக காட்சியளித்தான். அவனது பரம அமைதியும் பலமான யோசனையையும் கண்டு கலங்கியபடியே வந்த கான்ஸ்டபிளோ

   

”சார்” என இழுக்க சிதம்பரமோ

   

”ம்” என்றான்

   

”அந்த பொண்ணையும் அவங்க அப்பாவையும் அனுப்பிட்டேன் சார்”

   

”சரி”

   

”இந்த கேஸ்ல பல வில்லங்கம் இருக்கும் போல இருக்கு சார்”

   

”ஆமாம்”

   

”மேற்கொண்டு என்ன செய்யலாம்னு இருக்கீங்க சார்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.