”சிம்பிள் இப்ப தில்லை உயிரோட இருக்கான்னா சம்யுக்தாவை விடமாட்டான், அதனால அவன் செத்துட்டானா இல்லையான்னு கன்பார்ம் பண்ணிட்டு புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க நினைக்கிறாங்க, புது வாழ்க்கையில யாரும் தலையிடக் கூடாதுல்ல, முக்கியமா தில்லை அவங்க கிட்ட வரக்கூடாது, ஒருவேளை அவன் உயிரோட இருந்தா அவனை சம்யுக்தா பழிவாங்க ஏதாவது திட்டம் தீட்டியிருக்கனும்”
”அதை நம்மகிட்ட சொல்லலையே சார்“
”சம்யுக்தா புத்திசாலி, அவள் சொன்ன கதையில பல இடங்கள்ல கேப் விட்டு கேப் விட்டுதான் சொன்னா, அந்த கேப்ல என்னவோ நடந்திருக்கு, அதை சொல்லாம மிச்சத்தை சொல்றாங்க, அந்த கேப்ல நடந்த விசயத்தை நான் தெரிஞ்சிக்கனும்”
”அப்படி அந்த கேப்ல பெரிசா என்ன சார் இருக்கப் போகுது“
”இருக்கும் ஏதோ ஒண்ணு இருக்கு, தில்லையோட அடியாளுங்களை விசாரிச்சா தெரிஞ்சிக்கலாம்”
“தில்லையோட அடியாளுங்க எவனுமே இப்ப உயிரோட இல்லையே சார்“
”அப்படின்னு நம்மகிட்ட இருக்கற ஃபைல் சொல்லுது ஆனா, தில்லையே உயிரோட இருக்கறப்ப அவனோட ஆளுங்களை அவன் பத்திரமா பாதுகாப்பா மறைச்சி வைச்சிருப்பான், அதை கண்டுபிடிக்கனும்”
”கண்டுபிடிச்சி என்ன சார் செய்யப் போறீங்க”
“தில்லையை கைது பண்ணி என்கவுன்டர்ல போடனும்”
”அதனால உங்களுக்கு என்ன சார் கிடைக்கப் போகுது”