(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”சொல்லுய்யா”

   

”தில்லைக்கு கல்யாணம் ஆன விசயத்தை பத்தின தகவல் நம்மகிட்ட இருக்கற கேஸ் ஃபைல்லயே இல்லையே சார், எனக்கென்னவோ அந்தப் பொண்ணு நடிக்குதுன்னு நினைக்கிறேன்”

   

”இல்லை அப்படியிருக்காது, அவளைப் பார்த்தா சந்தேகம் வரலை, அவள் சொல்றது உண்மை”

   

”உண்மைன்னா ஏன் சார் வெளிய தெரியலை”

   

”தெரியாம பார்த்துக்கிட்டாங்க”

   

”யார் சார்”

   

”அவளேதான் எதிரிகிட்டயிருந்து தப்பிக்க நடந்த கல்யாணத்தை மறைச்சிருக்கலாம்”

   

”இப்ப மட்டும் புருஷன் வேணும்னு சொல்றாங்க”

   

”இப்பதான் தில்லையில்லைன்னு உலகம் நம்புதே, அதனால தில்லை வேணும்னு சொல்றாங்க, நல்லா கேட்டுக்குங்க, அவங்க தேடறது தில்லையைதான், அவங்க புருஷனை இல்லை“

   

”என்ன சார் சொல்றீங்க”

   

”ஆமாம்யா அவங்க சொன்ன கதையை கவனிச்சியா, ஆரம்பத்தில இருந்து பெரிசா சம்யுக்தாவுக்கு தில்லை மேல விருப்பம் இல்லை, ஆனாலும் அவன்கூட சில நாட்கள் ஒண்ணா ஒரே வீட்ல இருந்திருக்காங்க, ஒண்ணு அவங்களுக்கு நடந்த அநியாயத்துக்கு பழிவாங்க தில்லையை தேடனும் இல்லைன்னா உண்மையாவே தில்லை செத்துட்டான்னு உறுதியான தகவல் வேணும்”

   

”எதுக்கு சார் அப்படி செய்யனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.