(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 14 - பிந்து வினோத்

   

This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.

  

ன்னை மீறி சிரித்த ரோஹினி, உடனேயே தன்னை சுதாரித்துக் கொண்டு அமைதியானாள்...

   

ஆனால், அஜய் இப்போதும் அவளை தான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்! அஜயின் அந்த பார்வை அவளை என்னவோ செய்தது...

   

ஏன் என்ன என்ற காரணமே இல்லாமல் அவளின் கன்னங்கள் மெல்ல சூடாகின...

   

ரோஹினியின் இதழ்கள் சிவந்திருப்பதை பார்த்தே விழி திருப்ப முடியாமல் இருந்த அஜய், இப்போது அவளின் கன்னங்களும் மெல்ல மெல்ல அழகாக நிறம் மாறவும்... அவளை விழிகளால் விழுங்கி விட விரும்புபவனைப் போல விழி விரித்து பார்த்தான்... பார்த்துக் கொண்டே இருந்தான்!

   

இத்தனை வருடங்களில் அவன் அனுபவித்தே இராத புது விதமான உணர்வொன்று அவனினுள் பரவியது...

   

தன்னை மறந்து அப்படியே நின்ற அஜய் சில பல நொடிகளுக்கு பிறகே தன்னுணர்வு பெற்றான்! சங்கோஜத்துடன் தம்பியை பார்த்தான்! விஜயோ மும்முரமாக குச்சி ஐஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்! நல்லவேளை என நினைத்துக் கொண்ட அஜயின் கண்கள் மீண்டும் ரோஹினி பக்கம் சென்றது! அவள் இப்போது வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்! 

   

உடனடியாக அங்கே இருந்து போ என அஜயின் மனம் அவனுக்கு அறிவுரை வழங்கியது! அதை கண்டுக்கொள்ளாமல் ஒதுக்கி தள்ளி விட்டு, ரோஹினி பக்கத்தில் சின்ன இடைவெளி விட்டு உட்கார்ந்தான் அஜய்.

   

இப்போது ரோஹினியை நேராக அவனால் பார்க்க முடியவில்லை என்றாலும், ஓரக்கண்ணால் அவளை கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

   

அவளும் அவனைப் பார்க்காமல் வேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்!

   

“நான் வந்தப்போ என்னமோ கதை சொல்லிட்டு இருந்தீயேடா,” என்று தம்பியிடம் கேட்டான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.