(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

அவன் அதற்குள்,

   

“எதுக்கு வீட்டை விட்டு வந்த?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.

   

இவனுக்கு எப்படி அது தெரியும் என்று புரியாமல் விழித்தாள் ரோஹினி!

   

“உன் வயசுக்கு எக்ஸாம் ஃபெயில் ஆகி வந்த மாதிரி தெரியலை. லவ்வா??? ஹ்ம்ம்... அப்படியும் தெரியலையே! வீட்டுல யாரு கூடவாவது சண்டை போட்டுட்டு வந்துட்டீயா? ஹ்ம்ம்... அப்படி இருந்தா சித்தி ஹெல்ப் செய்ய மாட்டாங்களே! வேற என்ன???”

   

அஜய் மும்முரமாக யோசிக்கவும், ரோஹினி அவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல் விழித்தாள்.

   

நல்ல வேளையாக அந்த நேரத்தில் சாரதா உள்ளே இருந்து அவளை அழைத்தாள்.

   

“ரோஹினி, என்னடா செய்ற? சாப்பிட வா...”

   

“வரேன்... ம்மா...” என்று பதில் சொன்ன ரோஹினி, அது தான் வாய்ப்பு என, “அம்மா... கூப்பிடுறாங்க,” என சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல முயல, கோபத்துடன் அவளின் கையை அழுத்தமாக பிடித்து நிறுத்தினான் அஜய்.

   

“யாரு நீ? எதுக்கு என் அம்மாவை இப்படி தொல்லை பண்ணிட்டு இருக்க?” 

  

அஜய் அதை கேட்ட விதத்தில் ரோஹினியின் முகம் இன்னும் அதிகமாக வாடியது!

   

ஒருவேளை அவளின் கையை ரொம்பவும் அழுத்திப் பிடித்து விட்டானோ?

   

அஜய் குழப்பத்துடன் யோசிக்கும் போதே, ரொம்பவும் சுலபமாக அவளின் கையை பிடித்திருந்த அவனின் கையின் மணிக்கட்டை விரல்களால் பிடித்து, அவனின் கையை சுழற்றி தன் கையை 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.