விடுதலை செய்துக் கொண்டாள் ரோஹினி!
நடந்ததை நம்ப முடியாமல் அஜய் அதிர்ச்சியுடன் பார்க்க, ரோஹினி அவன் பக்கமே திரும்பி கூட பார்க்காமல் அங்கே இருந்து விடுவிடு என நடந்துச் சென்றாள்!
அஜய் இப்போதும் அவனின் கையை நம்ப முடியாமல் பார்த்தான்! அவன் பலசாலி என்பது அவனுக்கே தெரியும்.
பார்க்க பலவீனமான பெண்ணாக தெரிபவள் எப்படி அப்படி ஈசியாக அவனின் கையை சுழற்றி அவளின் கையை விடுவித்துச் சென்றாள்???
அஜய் அதிர்ச்சியுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த நேரத்தில், ரோஹினி உம்மென்ற முகத்துடன் டைனிங் டேபிள் முன் வந்து அமர்ந்தாள்! அவளுக்கு முன்பே அங்கே இருந்த விஜய் அவளின் முகத்தை பார்த்து விட்டு,
“ஹேய் ரோ, என்ன உன் முகம் திரும்ப என்னமோ மாதிரி இருக்கு??” என அக்கறையுடன் வினவினான்.
ரோஹினி வாயை திறந்து ஒன்றும் சொல்லாமல் முகத்தை திருப்பி அஜய் இப்போதும் அமர்ந்திருந்த திண்ணை பக்கமாக பார்த்தாள்.
புரிந்துக் கொண்டு, “அஜய் திரும்ப ஏதாவது சொன்னானா?” என்றான் விஜய்!
ரோஹினி இப்போதும் பதில் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள்!
“அவன் அப்படி தான் ரோ! அவனுக்கு நீ பெட்டியை தூக்க சொன்னதுனால கோபம் கிடையாது, அம்மா நைட் தரைல பெட்ஷீட் போட்டு படுத்தாங்களே, அதுக்கு தான் கோபம். அவன் ஒரு அம்மா செல்லப் பிள்ளை!”
ரோஹினி உதட்டை சுழித்துக் கொண்டு விஜயை பார்த்தாள்! அவளின் முகம் அழப் போகும் குழந்தையை போல இருந்தது!