(Reading time: 7 - 13 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

அஜய்.

   

“நாம ஸ்கூல் படிக்குறப்போ யாரு ஐஸை முதல்ல சாப்பிடுறதுன்னு விளையாடுவோமேண்ணா... அதை பத்தி ரோ கிட்ட சொல்லிட்டு இருந்தேன்,” என்றான் விஜய்.

   

ரோஹினியை அவன் ரோ என்று சொன்னதை அஜய் கவனிக்க தான் செய்தான்! ஆனால் அதை பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

   

“எப்போவும் நீ தானே என்னை ஜெயிப்ப, அதையும் சொல்லி பீத்திக்க வேண்டியது தானே?”

   

“நீ எனக்காக விட்டுக் கொடுப்பீயா இல்ல நிஜமாவே அப்படி ஸ்லோவா சாப்பிடுவீயா?”

   

“எனக்கு எல்லாத்தையும் ரசிச்சு, ருசிச்சு சாப்பிடுறது தான் பிடிக்கும்!”

   

தம்பியிடம் சொன்னாலும் அஜயின் பார்வை ஒரு நேனோ செகன்டிற்கு ரோஹினி பக்கம் போய் விட்டு தான் வந்தது.

   

“சாப்பிடலாம் வாங்க,” என்று அவர்களை அழைத்த படி வந்த சாரதா, மூன்றுப் பேரையும் பார்த்து விட்டு சிரித்தாள். பயந்து விட்டதை போல பொய்யாக நடித்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டு,

   

“இங்கிலீஷ் படத்துல வர ஜாம்பி (zombie) எல்லாம் மொத்தமா என் வீட்டுக்கு வந்து உட்கார்ந்திருக்கே. நான் என்ன செய்யப் போறேன்னு தெரியலையே,” என்றாள்!

   

“அம்மா, எங்களை பார்த்தா ஜாம்பி மாதிரியா இருக்கு உங்களுக்கு?” என விஜய் கோபித்துக் கொள்ள, ரோஹினி,

   

“ஜாம்பி’யா அப்படினா என்ன?” என்றுக் கேட்டாள்.

   

“என்ன ரோ இது தெரியாதுன்னு சொல்ற? இதுக்கு தான் ஒன்னு இரண்டு இங்கிலீஷ் ஹாரர் படம் பார்க்கனும்,” என விஜய் சொன்ன நேரத்தில்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.