தோன்றியது...!
எனவே அவனை நேராகப் பார்க்காமல் அறையின் ஒரு மூலையில் இருந்த பூஞ்சாடியை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்...
துளசி அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றாள்... ஆனால்... ஹுஹும்... அவர்கள் அவளை கவனிப்பதாக இல்லை...
“க்கும்...” என தொண்டையை சரி செய்த துளசி,
“அதுக்குள்ளே, ஒரு நாள்ல உனக்கு டவுட் வந்திருச்சாக்கும்,” என்றாள்.
“ஹி ஹி ஆமாம் அண்ணி...”
“ஆனால்... உங்க இரண்டு பேரையும் தனியா சந்திக்க விடுறது சரி இல்லையே...”
“என்ன இப்படி சொல்றீங்க அண்ணி?”
“சரி சரி... அழாதே... நான் சாஹித்யாவுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்துட்டு வரேன்... அதுக்குள்ளே எல்ல்ல்லல்ல்ல்லா சந்தேகத்தையும் கேட்டு முடிச்சிரு..”
“ஓகே... அண்ணி... என்ன தாராள மனசு உங்களுக்கு...”
அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, நந்திதாவிடம்,
“பத்து நிமிஷத்துல வந்திருவேன் அதுக்குள்ளே மயக்கம் கியக்கம் போட்டு அவனை பயமுறுத்தாதே,” என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு சென்றாள் துளசி.
துளசி வெளியே செல்ல காத்திருந்த உதய் அவள் சென்றதும், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சிகப்பு ரோஜாவை எடுத்து நந்திதாவின் முன் நீட்டினான்...