“சரி, சரி... ஓவரா டென்ஷன் ஆகாதே துளசி.... நான் செப்டம்பர் ஃபர்ஸ்ட் வந்திடுறேன்.... அருன், அபி, நீங்களும் அந்த டைம் போலவே வர பாருங்க...”
“இல்லைப்பா அவர் கிட்ட கேட்கனும்... ஹரிஷ் ஸ்கூல்...”
“க்கும்... அபி, எல்.கே.ஜிக்கு இந்த அலட்டல்???? அப்படி அவனுக்கு லீவ் கிடைக்கலைனா உன் ஹஸ்பன்டை பார்த்துக்க சொல்லிட்டு நீ வா...”
“அதெப்படி...”
“அதெல்லாம் தெரியாது, நம்ம செட்ல நடக்குற கடைசி கல்யாணம், கூடவே சரத்தை பார்க்கும் கோல்டன் ஆப்பர்ச்சுனிட்டி வேற, மிஸ் செய்ய கூடாது...”
“ஓகேப்பா... கலக்கிடுவோம்...! நந்து லவ் மேரேஜாமே, எப்படி லவ் வந்துச்சுன்னு சொல்லு பார்ப்போம்...”
“லவ்வா???? அதெல்லாம் ஒண்ணுமில்லை,” என அவசரமாக மறுத்தாள் அதுவரை அமைதியாக அவர்களின் கலாட்டாவை கேட்டுக் கொண்டிருந்த நந்திதா.
“அடிப்பாவி நந்து, இன்னுமா பொய் சொல்ல போற? என்ன எல்லாமோ கேள்வி பட்டேன்... உதய் சல்மான்கான் ஸ்டைல்ல ஷர்ட் எல்லாம் போடாம போஸ் கொடுத்து உன்னை இம்ப்ரஸ் செய்ததா நியூஸ் வந்துச்சே....”
அபி சொன்னதைக் கேட்டு, துளசியை பார்த்து முறைத்த நந்திதா,
“அதெல்லாமில்லை அபி,” என்று சொன்னாளோ இல்லையோ, அடுத்து வந்த சில பல நிமிடங்கள் தோழியரின் கேலி மற்றும் கிண்டலில் மாட்டிக் கொண்டாள்....
உதயை வைத்து அவர்கள் பேசி கேலி செய்வதை கேட்டு வெளியே சிணுங்கினாலும்,