முறைத்தாலும் கூட, உண்மையில் நந்திதாவிற்கு அது மிகவும் பிடித்திருந்தது....
அரை மணி நேரம் என்ன பல மணி நேரங்கள் அவர்கள் அப்படி கிண்டல் செய்தாலும் கூட அவளுக்கு ஓகே தான்....!
உதயையும் அவளையும் இணைத்து பேசுவதை கேட்க அவளுக்கு தேனாக இனித்தது...
மற்ற மூன்று தோழிகளும் செப்டம்பர் ஒன்றாம் தேதி வந்து விடுவதாக சொல்லி ஃபோனை வைத்த போது, நந்திதா ஒரு விதமான இனிய மன நிலையில் இருக்க, துளசி ஹைப்பர் டென்ஷனில் இருந்தாள்.
அதை புரிந்துக் கொண்டு,
“ஹேய் துளசி, அவங்க சும்மா கலாட்டா செய்றாங்க அது கூடவா உனக்கு புரியலை? எதுக்கு டென்ஷன் ஆகுற?” என்று தோழியை சமாதானப் படுத்த முயன்றாள் நந்திதா.
“அதில்லைடி நந்து.... நான் இப்போ உன்னை மட்டும் இல்லாம சரத்தையும் வேற ஷேப்புக்கு கொண்டு வரணும்... இல்லைனா அந்த பொண்ணுங்க வந்து கலாட்டா செய்தே கடுப்பேத்திடுவாங்க...”
“பாவம் சரத்...”
“ரொம்ப பாவம் தான்... சரி நாம நம்ம ப்ளான் கண்டின்யூ செய்வோம்... பார்லர் எல்லாம் ஈவன்ட் பிளானர்ஸ் அரேன்ஜ் செய்வாங்களான்னு கேட்கனும்...”
“அது இருக்கட்டும் ஒசிமம், சாரீ வாங்க யாரெல்லாம் வராங்கன்னு சொன்ன?”
“நீ, நான், அத்தை, ரேவதி அத்தை, அப்புறம் அந்த ப்ரியா வந்தா வருவா...”
“அவ்வளோ தானா????”