“எவ்வளோ தானா????”
“இல்லை... நாம மட்டும் தான் போறோமா?”
துளசி தோழியை பார்த்து செல்லமாக முறைத்தாள்.
“உதய் வருவானான்னு உனக்கு தெரியனும் அவ்வளவு தானே? அதை நேரா கேட்க வேண்டியது தானே???? பாவம்டி உதய்....! நீ இப்படியே தலையை சுத்தி மூக்கை தொட்டுட்டு இரு... அவன் பே பேன்னு முழிக்க போறான்...”
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... நீ கவலைப் படாதே... அவர் வருவாரா???”
“எல்லாம் வருவான்... அவனை ஏன் விடுறோம்... அப்புறம் ஷர்ட் இல்லாம கல்யாண மேடைக்கு வந்து நிறைய பேருக்கு ஹார்ட் அட்டாக் தர போறான்...”
“ஹேய்... சும்மா அவரை கலாட்டா செய்யாதே...”
நந்திதா சொல்லிக் கொண்டிருந்த நேரம் அந்த அறைக் கதவை மெல்ல தட்டி விட்டு அறையினுள் வந்தான் உதய்.
நந்திதா, துளசி இருவருமே அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.
“ப்ராஜக்ட் பத்தி நிறைய டவுட் க்ளியர் செய்ய வேண்டி இருந்தது அண்ணி... கீழே பெரியம்மா தான் சொன்னாங்க நீங்க இரண்டு பேரும் இங்கே இருக்கீங்கன்னு...”
உதய் பேசியது என்னவோ துளசியிடம் தான் ஆனால் அவனின் கண்கள் நந்திதாவின் பக்கமே இருந்தது...!
உதயின் எதிர்பாராத வரவில் சந்தோஷம் பொங்கினாலும், நந்திதாவினுள் தானாக வெட்கமும்