வித்தியாசமானவர்...”
“நானே அவர பத்தி அப்படி தான் மேம் நினைச்சேன்... சாரி...”
“அதான் உனக்கு இப்போ அவரை பத்தி தெரிஞ்சிருச்சே... அப்புறம் எதுக்கு சாரி எல்லாம் சொல்ற... சரிம்மா, எனக்கு 5 மினிட்ஸ்ல மீட்டிங் இருக்கு...”
“யூ கேரி ஆன் மேம்... நானும் என் வேலையை பார்க்குறேன்....”
சொன்னது போலவே தன் சீட்டிற்கு வந்து வேலையை செய்தாலும், முதல் நாள் ஆகாஷிடம் அவள் சொன்ன,
‘நான் உங்களை மாதிரி அப்பாவோட நிழல்ல இருந்து வந்தவ இல்லை. ஒவ்வொரு அடியையும் சொந்தமா எடுத்து வச்சவ. என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு,’
என்ற டையலாக்கே மீண்டும் மீண்டும் மனதில் வந்து உறுத்திக் கொண்டிருந்தது...
அப்படி பேசியதற்கு அன்றே சாரி சொல்லி விட்டாள் தான்...
ஆனாலும் அவள் பேசிய பேச்சிற்கு ஒன்றும் சொல்லாமல், கோபப்படாமல், அவளை இந்த ப்ராஜக்ட் செய்ய அனுமதித்தது ஆகாஷின் பெருந்தன்மையை தானே காட்டுகிறது...
அவன் மட்டுமா லூசு! அவளும் கூட லூசு தான்!
முழு விபரம் தெரியாமல் அவளாக யூகித்து தப்பு தப்பாக பேசினால் வேறு என்ன சொல்வது...
✽✽✽
சினேகா தன் ஆஃபீஸ் சீட்டில் இருந்து தன் மனதினுள் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஆகாஷ் அக்ஷராவுடன் கதை பேசியபடி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.