மிஸ்டர் பர்ஃபக்ட் தான் என்றும் தோன்றியது...
“சினேகா சினேகா....????”
ஷெல்லியின் குரல் உரக்க அவளின் பெயரை அழைத்துக் கொண்டிருந்தது...
“ஷெல்லி...!!!???? ஏன் கத்துறீங்க????”
“நான் கத்துறேனா??? எவ்வளவு நேரமா உங்களை கூப்பிட்டுட்டு இருக்கேன்...”
“சாரி... ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்... சொல்லுங்க ஷெல்லி...”
“இந்தாங்க இன்விடேஷன்... எனக்கு கல்யாணம்...”
“வாவ்! கங்கிராட்ஸ்...! சொல்லவே இல்ல...”
“உங்களையும் உங்க மஹா அக்காவையும் தவிர இந்த ஹாஸ்டல்ல எல்லோருக்கும் தெரியும்...”
“ஓ அப்படியா??”
“ஆமாம்...!!! சரி, கட்டாயம் கல்யாணத்துக்கு வாங்க... சண்டே தான்... நீங்க லீவ்லாம் போட வேண்டாம்...”
“கட்டாயம் வரேன் ஷெல்லி...”
“அப்புறம், உங்க கல்யாணம் எப்போ சினேகா?”
“கல்யாணமா??? அதெல்லாம் மெதுவா செய்துக்கலாம்...”
“அந்த மாதிரி யோசிக்காம, காலா காலத்துல யோசிங்க சினேகா...! சரி, நான் மத்த ரூமுக்கும்