போய் இன்விடேஷன் கொடுத்துட்டு வரேன்... அப்புறமா பேசலாம்...”
ஷெல்லி சென்று விட, சினேகா கையிலிருந்த கல்யாண பத்திரிக்கையை புரட்டினாள்...
‘உங்க கல்யாணம் எப்போ?’ எனும் கேள்வி கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே அவ்வப்போது சிலர் அவளிடம் கேட்கும் கேள்வி தான்...
எப்போதும் அதை brush aside செய்து விடுவாள்...
ஆனால், இன்று முதல் முறையாக திருமணம் என்பதை பற்றி யோசித்துப் பார்த்தாள் சினேகா...
அவளுக்கு கல்யாணம் என்று ஒன்று நடந்தால் அந்த மணமகன் எப்படி இருப்பான்...????
தானாக ஆகாஷ் தான் சினேகாவின் நினைவில் வந்தான்...
கண்களை நேராக பார்த்து பேசும் அவனின் பழக்கம்...
ஒவ்வொரு அசைவிலும் அவனிடம் இழையோடும் கண்ணியம்...
பந்தா இல்லாமல் தோள் கொடுக்கும் தோழனாய் பேசும் அவனின் எளிமை...
அப்புறம் கொஞ்சமே கொஞ்சம் லூசாக...
தனக்கு தானே சிரித்துக் கொண்டவளின் உதடுகள்,
“ஆகாஷ்..” என்று மெல்ல முனுமுனுத்தது...!
அவனின் பெயரை சொன்னதாலோ என்னவோ அவளின் உதடுகள் இனிப்பதாக சினேகாவிற்கு தோன்றியது...!