(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

ஆகாஷின் குரல் கேட்டு ஒரு துள்ளலுடன் திரும்பி அவனை பார்த்தாள் சினேகா...

   

அவளின் மனதில் குமிழிட்டுக் கொண்டிருந்த சந்தோஷம் முகத்தில் தெரிந்தது போலும், அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் ஆகாஷ்...

   

அவனின் வித்தியாசமான பார்வையில் அவளின் கன்னங்கள் மெல்ல சூடேறி சிவந்தன...

   

“குட் மார்னிங் சார்,” என எப்படியோ முனுமுனுத்து வைத்தாள்...

   

✽✽✽

   

ஆகாஷின் விழிகள் எதிரே நின்ற சினேகாவை அள்ளிப் பருகி கொண்டிருந்தன...

   

அன்று கண்ணை உறுத்தாத பீச் நிற சேலையை நளினமாக கட்டி இருந்தாள் சினேகா... மஞ்சள் நிற இளவெயில் + பச்சை நிற இலைகள் பின்னணியில் இன்னமும் அழகாக தெரிந்தாள்...

   

ஆகாஷ் அவளை அப்படி விழிகளால் ரசித்தது ஒன்றிரண்டு வினாடிகள் தான்... அவளின் பிம்பத்தை அப்படியே மனதில் பதிய வைத்து விட்டு தன்னுடைய அலுவலக அறைக்கு சென்றான்...

   

அதன் பிறகு அவனுக்கு நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது...

   

நான்கு மணி ஆன போது அவனின் ஃபோனில் அவன் செட் செய்திருந்த reminder ஓசை எழுப்பியது!

   

அதை எடுத்து பார்த்தவன் அன்று அன்னையர் தினம் என்பதை நினைவுப் படுத்த அவன் வைத்த reminder என்பதை புரிந்துக் கொண்டான். மாலையில் அம்மா, அப்பாவுடன் டின்னர் போக திட்டமிட்டிருந்தான்... அதற்கு முன் அம்மாவிற்காக ரோஸ் பொக்கே வாங்க தான் அந்த reminder!!!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.