Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 30 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மூகூர்த்த நேரம் முடிந்து, மணமக்கள் பெரியவர்களிடம் ஆசி வாங்கவும், மீண்டும் ஹேமாவிற்கு கமலின் நினைவு வந்தது.
விமலிடம், “உங்க அண்ணாவையும் கூப்பிடுங்க... அவர் கிட்டேயும் இவங்க ஆசி வாங்கிக்கட்டும்,” என்றாள்.
மணமகளாக இருந்தாலும்,
“ப்ச்... அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி... அவர் எதுக்கு... இங்கே வந்தா அப்புறம் எல்லோருடைய மூடையும் அவுட் செய்திருவார்... வேண்டாம்... நாங்க நல்லா இருக்கனும்னு நினைக்குறவங்க எல்லோரும் இங்கே இருக்காங்க... இவங்க ஆசி போதும் எங்களுக்கு,” என்றாள் ரேஷ்மி வெடுக்கென்று!
“இல்ல ரேஷூ, என்ன இருந்தாலும் உன் அப்பா... அவர்...”
“ஆன்ட்டி, நீங்க சொல்ற செண்டிமெண்ட் எல்லாம் மனுஷங்களுக்கு... இவர் ஸ்டோன் மேன்... இவருக்கு அதெல்லாம் கிடையாது... மேரேஜுக்கு அவர் வந்திருக்குறதே உலக அதிசயம் தான்...”
“ரேஷ்மிக்கு பிடிக்கலைனா விடு ஹேமா, கம்பல் செய்யாதே,” என ராகுலும் சொல்ல, வேறு வழி இல்லாமல் அந்த பேச்சை அத்தோடு விட்டாள் ஹேமா..
இருந்தாலும் மனம் கேட்காமல் சிறிது நேரம் கழித்து கமல் இருந்த இடத்தை தேடி கண்டுப்பிடித்து சென்றாள்.
கமல் அவன் பக்கத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்...
“கமல்...”
ஹேமாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பிய கமல், ஹேமாவை பார்த்து புன்னகை