தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 49 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“நீ இல்லாம ஆஃபிஸ் ரொம்ப போர் அடிக்குது நதி,” என்றான் உதய் கண்களை இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு!
நந்திதா என்ன பதில் சொல்வதென்று புரியாமல் புது விதமான கிறக்கத்துடன் அமைதியாக நின்றாள்!
“பேசாம நாகுவை கம்பெனியை பார்த்துக்க சொல்லிட்டு, நான் இந்த ரூம்ல இப்படி ஒரு ஓரமா உட்கார்ந்து உன்னையே பார்த்துட்டு இருக்கட்டா????”
நந்திதாவின் முகத்தில் வெட்கத்தையும் மீறி புன்னகை அரும்பியது! “நான் வேண்டாம்னு சொல்லுவேன்ற தைரியத்துல தானே கேட்குறீங்க?”
“இல்லவே இல்லை... நீ சரின்னு மட்டும் சொல்லி பாரேன்....”
“ப்ச்... அதெல்லாம் வேண்டாம்... வந்த விஷயத்தை பத்தி சொல்லுங்க... என்ன டவுட் உங்களுக்கு?”
“பெரிய டவுட்... இது இரவா பகலா?”
அதுவரை உதயை நேராக பார்க்க தயங்கி கொண்டிருந்த நந்திதா, விழிகளை திருப்பி அவனை பார்த்தாள்...
“ஹ்ம்ம்... இப்போ பகல் போல தான் தோணுது நதி... கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இருட்டா இருந்தது,” என்றான் உதய் அவனின் வசீகர புன்னகையுடன்!
“ரொம்பவே முக்கியமான ஆராய்ச்சி... ப்ராஜக்ட்ல என்ன சந்தேகம்னு சொல்லுங்க...”
“யாருக்கு தெரியும்... நான் அது எதையும் பார்க்கவே இல்லை... உன்னை பார்க்கனும், பேசனும் போல இருந்துச்சு... அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்... வாயில வந்த பொய்யை சொன்னேன்...”