“நல்ல வேலை அவருக்கு உன்னை மாதிரி புத்திசாலி ஃப்ரென்ட் யாரும் இல்லை. இல்லைனா இந்நேரம் நான் அவரை ஜாகிங் செய்ங்க, இதை சாப்பிடாதீங்க அப்படி இப்படின்னு சொல்றதுக்கு இப்படி ஏதாவது ரீசன் கண்டுப்பிடிச்சு சொல்லி இருப்பாங்க!”
“ஹுஹும்.... அவங்களாம் நம்மளை மாதிரி புத்திசாலிங்க கிடையாது ஒசிமம்... நமக்கு நிறைய படி கீழே...”
“அப்படியா சொல்ற?”
“பின்ன உன்னை பார்த்து அழகா இருக்கன்னு சரத் நினைக்கனும்னா, அவரோட இனத்தோட ப்ரெயின் எந்த அளவுக்கு யோசிக்குறதா இருக்கனும்னு உனக்கு புரியலையா என்ன?”
“ஹேய்.... கொழுப்பா??? உன்னையே பார்த்து ஜொள்ளு விட ஒருத்தன் இருக்கான்... அப்புறம் எனக்கு என்ன குறைச்சல்?”
“அது சரி!”
அவர்களின் கலாட்டாவிற்கு முற்றுபுள்ளி வைப்பது போல கதவை திறந்து உள்ளே வந்த காமாட்சி, அவர்கள் இருவரையும் பார்த்து ஒரு வினாடி திகைத்து நின்றாள்.
“ஏன்ம்மா இப்படி எல்லாம் பயமுறுத்துறீங்க?”
“அத்தை, இன்னும் கடலை மாவு மீதி இருக்கு வேணும்னா நீங்களும் போட்டுக்கோங்க,” என்றாள் துளசி!
“எனக்கு வேண்டாம்மா... ரேவதி ஃபோன் செய்தா, பத்து மணிக்கு சரியா வர சொன்னா... இரண்டு பேரும் இந்த பேய் வேஷத்தை எல்லாம் கலைச்சிட்டு ரெடியாகுற வேலையை பாருங்க...”
“பேயா??” என துளசி கேட்க,