(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

வருவாங்களே, அதனால எதுக்கும் எக்ஸ்ட்ரா பளிச்சுன்னு போ...”

   

“எப்படி இத்தனை டெக்னிக்கை மறைச்சு வச்சிருக்க! கலக்குற துளசி,” என்றபடி துளசி தந்திருந்த கடலை மாவு பேஸ்ட்டை முகத்தில் தேய்த்த நந்திதா, மீதம் வந்த கலவையை துளசியிடமே தந்தாள்.

   

“இந்தா, இதை நீ யூஸ் செய்துக்கோ...”

   

“எனக்கு எதுக்குடி நந்து? நீ தான் கல்யாண பொண்ணு...”

   

“ஆமாம்... ஆனால் நம்ம ஃப்ரென்ட்ஸ் வராங்கன்னு சரத்தை மட்டும் ரெடி செய்ற, நீ என்ன ஆன்ட்டி லுக்கோட இருக்க போறீயா??? ஒழுங்கா நீயும் அப்ளை செய்... உன் முகமும் பளிச்சுன்னு இருக்கட்டும்...”

   

மறுக்காமல் நந்திதாவை போலவே கடலை மாவு கலவையை முகத்தில் பூசிக் கொண்டே பேசினாள் துளசி.

   

“தேங்க்ஸ்டி... சரத்துக்கு இதெல்லாம் தோணவே இல்லை பார்த்தீயா??? உனக்கு இருக்க அக்கறை கூட அவருக்கு வர வர இல்லை...”

   

“இதுல என்ன ஒசிமம் ஆச்சர்யம்? சரத் அப்படி ஏதாவது சொல்லி இருந்தா தான் யோசிச்சிருந்திருக்கனும்!”

   

“ஹாங்...??? என்ன சொல்ற?”

   

“சரத் கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியுற, அதான் அவர் நீ எக்ஸ்ட்ராவா எதுவும் செய்யனும்னு சொல்லலை...”

   

கடலை மாவு பூசி இருந்த நிலையிலும், துளசியும் முகம் மலர்ந்து மின்னியதை, பளிச்சிட்ட அவளின் கண்கள் காட்டின.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.