நந்திதா மீண்டும் அமைதியாக நின்றாள்...
“எப்படியோ எதையோ சொல்லி உன்னை மீட் செய்தாச்சு... என்ன, இப்போ திரும்பி போக தான் மனசு வர மாட்டேங்குது...”
“அதெல்லாம் வரும் போய் வேலையை பாருங்க...”
“ப்ச்...”
“என்ன?”
“மனசு வர மாட்டேங்குது நதி... அநியாயத்துக்கு அழகா இருக்கீயே...”
அந்த நேரம் வெளியே துளசியின் குரல் கேட்டது...
“அச்சச்சோ, வார்டன் வந்துட்டாங்க... இனி வேற வழி இல்லை... நான் கிளம்புறேன்... ஃபோன் செய்றேன்...” சொல்லிக் கொண்டே நந்திதாவின் பக்கம் வர ஒரு அடி எடுத்து வைத்த உதய், அவள் கலக்கத்துடன் கண்களை விரித்து அவனை ஒரு பார்வை பார்க்கவும், மீண்டும் ரிவர்ஸில் சென்றான்!
“உன் கிட்ட நிறைய பேசனும்... ஆனா, அதான் ஃபுல் லைஃப் டைம் நமக்கு இருக்கே... மெதுவா பேசலாம்... அப்போ கிளம்புறேன் நதி...”
மனமே இல்லாமல் உதய் கிளம்ப, நந்திதாவும் மனமே இல்லாமல் தான் அவனுக்கு விடை கொடுத்தாள்...
ஆனால், அவளின் முகத்தில் வந்த சின்ன மாற்றத்தை கவனித்தே அவளின் விருப்பத்திற்கு மதிப்புக் கொடுத்த உதயின் மீது அவளுக்கு காதலும், மதிப்பும் எக்குச்சக்கமாக ஏறிப் போனது என்னவோ உண்மை!