(Reading time: 7 - 13 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

உணர வைத்திருந்தது...

   

அம்மா அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்து, அவர்களை இழந்து நிற்பவளுக்கு, இனி உதய் எல்லாமுமாக இருப்பான் என்ற நம்பிக்கை மனதில் தோன்றி இருந்தது... மீண்டும் அவளுக்கென ஒரு குடும்பம் வர போகிறது...

   

இப்படி எதை எதையோ யோசித்து, கனவுகளுடன் திருமண நாளை வெகு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தாள் நந்திதா....

   

கல்யாணத்திற்கு மண்டபம் தொடங்கி மற்ற அனைத்து விஷயங்களையும் காமாட்சி ஏற்பாடு செய்திருந்த வெட்டிங் பிளானர்ஸ் பார்த்துக் கொள்ள, திருமணத்திற்கு தேவையான துணிமணிகள் எடுக்கும் வேலை மட்டுமே எஞ்சி இருந்தது.

   

அன்று பத்து மணி அளவில் நந்திதா, துளசி, காமாட்சி மூவரும் துணி கடைக்கு செல்வதாக திட்டமிட்டு இருந்தனர். ரேவதி, உதய் மற்றும் ப்ரியாவுடன் நேராக அங்கேயே வந்து விடுவதாக சொல்லி இருந்தாள்.

   

காலை முதலே உதயை சந்திக்க போவதை நினைத்து எக்ஸ்ட்ரா பரபரப்பில் இருந்தாள் நந்திதா.

   

தினமும் அவனுடன் ஃபோனில் பேசினாலும், நான்கு முறை ஏதேதோ பொய் காரணங்களை சொல்லிக் கொண்டு அவனே அவளை தேடி இங்கே வீட்டிற்கு வந்திருந்தாலும் கூட, இன்றைய சந்திப்பை அவள் வெகுவாக எதிர்பார்த்தாள்.

   

“நந்து,” என்ற அழைப்புடன் அறைக்குள் வந்த துளசி, வழக்கமாக தரும் வெள்ளரிக்காய்களுடன், சிறு கின்னத்தையும் தோழியின் கையில் கொடுத்தாள்.

   

“இது என்னடி புதுசா இருக்கு?”

   

“கடலை மாவை பன்னீர்ல மிக்ஸ் செய்திருக்கேன். முகத்துல இருபது நிமிஷம் வச்சுட்டு கழுவினா முகம் பளிச்சுன்னு இருக்கும்... இன்னைக்கு கடைக்கு ரேவதி அத்தையும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.