✽✽✽
Fairy taleல் வருவது போல ஒரே நாளில் மாறி போயிருந்த அவளின் வாழ்க்கையை நினைத்து நந்திதாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது...
ஆனால் மிக மிக பிடித்தும் இருந்தது...
அடுத்து வந்த நாட்கள் இதே போல இனிமையாகவே சென்றன... உதயும் அவளும் ஃபோனில் ஸ்வீட் நத்திங்க்ஸ் பேசியே பொழுதை கழித்தார்கள்...
இரவெல்லாம் உதயை நினைத்து, மனம் கசிந்து காதலில் உருகி, தூக்கத்தை தொலைத்தாள் நந்திதா...
ஒரு நாளுக்கு முப்பது முறையாவது கேலன்டரில் செப்டம்பர் ஒன்பதாம் தேதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது என்று எண்ணினாள்...
இப்படி இனிமையாக கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவளை நிஜத்தை உணர செய்தது திருமணத்திற்கு சேலை வாங்க சென்ற போது நடந்த அந்த சம்பவம்!!!
✽✽✽
நாட்கள் எப்படி செல்கின்றன என்று தெரியாமலே வேகமாக சென்றுக் கொண்டிருந்தன.
நந்திதா புதுவிதமான அனுபவத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
உதய் அவளிடம் காட்டிய ஆர்வம்... அவனின் பேச்சு... அவனுக்கு அவள் மீதிருந்த காதல் என மொத்தமாக அவளை புதுவிதமான உலகில் உலவ செய்திருந்தது...
உதய் அவளிடம் செல்லம் கொஞ்சிய விதம் அவளை கிரீடம் சூட்டப் படாத இளவரசியாக