(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

புரிந்தான்.

   

“எப்படி இருக்கீங்க டாக்டர்?”

   

“இன்னும் என்ன டாக்டர்ன்னு கூப்பிடுறீங்க? நாம இப்போ சொந்தக்காரங்க ஆகிட்டோமே,” என்றாள் ஹேமா அதே புன்னகையுடன்!

   

“இன்னைக்கு இல்ல, நீங்க எப்போவுமே எங்களுக்கு சொந்தக்காரங்க போல தான் டாக்டர். சுமி என்னைக்குமே உங்களை அந்நியமா நினைச்சதில்லை... நானும் கூட அப்படி தான்...”

   

பரவாயில்லையே, இவ்வளவு பேசி விட்டானே என்ற ஆச்சர்யம் எழுந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், “தெரியும் கமல்... ஏன் இங்கே இருக்கீங்க??? நடக்குறது உங்க பொண்ணோட கல்யாணம்... மேடை பக்கமா வாங்க,” என அழைத்தாள் ஹேமா.

   

கமலின் முகத்தில் தயக்கம் தெரிந்தது! “அங்கே தம்பி இருக்கானே, அவன் பார்த்துப்பான்...”

   

“அவரும் ரோஷனியும் இருக்காங்க! என்ன இருந்தாலும் நீங்க தானே ரேஷ்மியோட அப்பா... இப்படி தள்ளி இருக்குறது நல்லா இல்லை... வாங்க...”

   

“அப்படி பார்த்தா சுமி ரேஷ்மியோட அம்மா... அவ எங்கே?”

   

“கமல்...??”

   

“என்னை விடுங்க டாக்டர்... நான் அங்கே இருந்தாலும் ஒன்னு தான் இல்லைனாலும் ஒன்னு தான்... ரேஷ்மி சந்தோஷமா இருந்தா போதும். உங்க வீட்டு மருமகளா அவ கட்டாயம் சந்தோஷமா தான் இருப்பா... எனக்கு நல்லா தெரியும்...”

   

“கமல், சுமி இறந்து இருபது வருஷம் ஆச்சு... இன்னும் நீங்க அவளை பத்தியே நினைச்சுட்டு இருந்தா எப்படி? ரேஷ்மி உங்களை...”

   

“டாக்டர்!!!” கமல் கோபமாக அழைத்த விதத்தில் ஹேமா திகைத்து தான் போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.