(Reading time: 6 - 12 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“சுமிய பத்தி அப்படி எல்லாம் சொல்லாதீங்க... அவ என் கூட தான் இருக்கா... வேண்டாம்... நாம மேலே பேச வேண்டாம்.. போங்க போய், மத்த வேலைகளை பாருங்க!”

    

அதற்கு மேலே அங்கே நின்று என்ன பேசுவது என்று புரியாமல் திரும்பி நடந்தாள் ஹேமா.

   

✽✽✽

   

அது தான் ஹேமா கடைசியாக கமலிடம் பேசியது...

   

முன் தினம் அவனுடன் பேசிய போது, இன்று அவனை இப்படி உயிரற்ற நிலையில் பார்ப்பாள் என்று அவள் எதிர்பார்கவே இல்லை.

   

ஒரு மருத்துவராக இது போன்ற நிகழ்வுகளை பலமுறை பார்த்திருக்கிறாள்.

   

நம் கண்களுக்கு ஆரோக்கியமாக, திடகாத்திரமாக தோன்றுபவர்களை இன்னும் பல ஆண்டுகள் வாழ்வார்கள் என்று நாம் நினைக்க, மரணம் திடீரென அவர்களை அணைத்து விடுகிறது.

   

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் சிலரோ மருத்துவர்கள் பலரும் ஆச்சர்யப் படும் வண்ணம் மரணத்திற்கு ‘டிமிக்கி’ கொடுத்து பல ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

   

இதற்கெல்லாம் காரண காரியங்கள் ஆராய்ந்து சொல்வது கடினம் தான்...

   

மனிதனின் எல்லையை தாண்டிய சக்தி ஒன்று இருக்க தான் செய்கிறது!

   

ஹேமா தன் யோசனையில் ஆழ்ந்திருக்க, பக்கத்தில் எழுந்த பல அசைவுகள் அவளை திரும்பி பார்க்க வைத்தது! தொடர்ந்து சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெற, கமலின் இறுதி பயணம் தொடங்கியது.

   

கண்களில் மின்னிய கண்ணீருடன் இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஹேமாவின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.