“ஷ்யாம், காலையில இருந்து யாரும் எதுவும் சாப்பிடலையே, அதுக்கு கொஞ்சம் அரேஞ் செய்... நான் ரேஷூ பக்கத்துல இருக்கேன்,” என்றாள் ஹேமா!
ஷ்யாம் ரேஷ்மி பக்கம் பார்க்க, அவள் மெல்ல தலை அசைத்தாள்.
“சரிம்மா, நான் போய் பார்க்கிறேன்,” என சொல்லி எழுந்துக் கொண்டான் ஷ்யாம்!
“ம்ம்ம்... கதவை சாத்திட்டு போ...”
ஷ்யாம் சென்று விட, மருமகளின் அருகே அமர்ந்து அவளை அணைத்துக் கொண்டாள் ஹேமா.
“ஆன்ட்டி... நான்....”
விக்கலும், கேவலுமாக பேச முடியாமல் அழுதாள் ரேஷ்மி...
ஹேமாவிற்கு அவளின் அழுகை ஆச்சர்யத்தை கொடுக்கவில்லை! உயிரோடு இருக்கும் ஒருவரை வெறுத்து ஓதுக்குவதும், அவரே இறந்ததும் வருத்தப்படுவதும் மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் பண்பு என்பதை அனுபவத்தில் உணர்ந்திருந்தாள் ஹேமா!
எனவே ரோஷனியின் அழுகையை பற்றி ‘கமன்ட்’ சொல்லாமல் அவளை தேற்ற முயன்றாள்!
“ரிலாக்ஸ் ரேஷூ...”
“முடியலை ஆன்ட்டி... என்ன தான் இருந்தாலும் எனக்கு டைரக்ட் ரிலேஷன்னு இருந்தவர் அவர் தானே... நேத்து நீங்க சொன்னப்போவாவது நான் அவர் கிட்ட பேசி இருந்திருக்கலாம்... ஆசீர்வாதம் வாங்கி இருந்திருக்கலாம்...”
ஹேமா சட்டென பதில் சொல்லாமல் நிதானத்தை கடைப் பிடித்தாள்...!