உடனேயே ஐஸ்வர்யாவை அழைத்தான்.
“ஐஸ்வர்யா, நான் அரை மணி நேரத்துல கிளம்பிடுவேன்... அம்மாக்கு கொடுக்க ரோஸ் பொக்கே வாங்கனும்... நம்ம ஃப்லோரல் கார்னரில ஒரு டசன் ரெட் கலர் ரோசஸ் இருக்கிறதா பொக்கே வாங்க முடியுமா?”
“ஓகே பாஸ். இப்போவே வாங்கிட்டு வரேன்...”
கிளம்பி சென்ற பத்து நிமிடங்களில் அவனை ஃபோனில் அழைத்தாள் ஐஸ்வர்யா.
“பாஸ், ஒரு மேரேஜ் ஃபங்க்ஷனுக்காக இங்கேருந்து மொத்த ரெட் ரோஸசையும் வாங்கிட்டாங்களாம்... அடுத்து புதுசா பூ காலைல தான் வருமாம்... எல்லா கலரும் இருக்க மாதிரி பொக்கே தான் இருக்கு, அதை வாங்கட்டுமா???”
“அதுல ரெட் ரோசஸ் இருக்கா ஐஸ்வர்யா?”
“ஒன்னு இரண்டு இருக்கு பாஸ்... ஆனா, அது ஆல்ரெடி ரெடி செய்து வச்சிருக்காங்க, அதுல இருந்து எடுக்க முடியாது, எடுத்தா நல்லா இருக்காதுன்னு சொன்னாங்க...”
“மேக்ஸ் சென்ஸ்... நீ என்ன செய், இந்த மாதிரி இருக்க பொக்கெல கவுன்ட் செய்து 12 ரெட் ரோஸ் வர மாதிரி பொக்கே வாங்கிட்டு வா... நான் அதை அரேன்ஜ் செய்துக்குறேன்...”
“ஓகே பாஸ்...”
அடுத்த பத்து நிமிடங்களில் நான்கு பொக்கேவுடன் அவன் முன் வந்து நின்றாள் ஐஸ்வர்யா.
“தேங்க் யூ ஐஸ்வர்யா...”
“நோ மென்ஷன் பாஸ். டைம் கம்மியா இருந்ததால வேற எதுவும் செய்ய முடியலை... அரேன்ஜ் செய்ய என் ஹெல்ப் வேணுமா?”