Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 31 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரேஷ்மிக்கு ஹேமா சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க, ஷ்யாம் திரும்பி வந்தான்.
ஒரு தட்டில் ரேஷ்மிக்கென இட்லி எடுத்து வந்திருந்தான்...
“நீ சாப்பிட்டீயா ஷ்யாம்?” என மகனிடம் விசாரித்தாள் ஹேமா.
“சாப்பிட்டேன்மா... அப்பா உங்களை கூப்பிட சொன்னார்...”
“நான் போறேன்... நீ ரேஷ்மி கூடவே இரு... அவ கிட்ட அன்பா பேசி சமாதானம் செய்...”
“சரிம்மா...”
மருமகள் பக்கம் பார்த்து, “ரேஷூ, சாப்பிட்டு படுத்து தூங்கு,” என்றாள் ஹேமா.
ரேஷ்மி அசையாமல் அமர்ந்திருந்தாள்.
ஹேமா மகனிடம், “ஷ்யாம், அவளுக்கு ஊட்டி விடு... நல்லா பாத்துக்கோ,” என சொல்லி விட்டு சென்றாள்.
ஷ்யாம் ஹேமா சொன்னதை அப்படியே கடை பிடித்தான்.
இட்லி வேண்டாம் என்று மறுத்த ரேஷ்மிக்கு கட்டாயப்படுத்தி ஊட்டி விட்டான்... அவளை தன் மார்போடு சாய்த்துக் கொண்டு, ஆறுதல் கூறி தூங்க வைத்தான்...
அத்தனை கவலைக்கும் அவனின் அணைப்பு தான் தீர்வு என்பது போல அவனை இறுக்கமாக அணைத்தப்படியே தூங்கி போனாள் ரேஷ்மி.
மெல்ல அவளை நன்றாக படுக்க வைத்து, அவளை அணைத்தவாறே பக்கத்தில் படுத்த ஷ்யாமும் சில நிமிடங்களில் தூங்கிப் போனான்...
Oh my God sis 🥹🥹🥹 don't know something I feel very heavy in heart when I read this, please update next episode ASAP, love your writing a lot especially this story 💗💗💗 thanks for the wonderful creation 🙏🏻🙏🏻🙏🏻
Aww, that means so much to me! 💗 I'm so happy to hear that this story touched your heart. Your support and love truly motivate me! I'll work on the next episode ASAP. Thank you for your kind words! 💕✨