(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

குழந்தையை கையில் தாங்கவும் பயமாக இருந்தது. என் முரட்டு கை பட்டால் வலிக்குமோ?

   

எப்போதும் போல நான் சொல்லாமலே என் மனதை புரிந்துக் கொண்ட சுமி,

   

“என்னங்க நீங்க... அதெல்லாம் பாப்பாக்கு வலிக்காது... தூக்குங்க,” என்றாள்.

   

குழந்தை பெற்றெடுத்த அயர்வில் வாடி போயிருந்த சுமியின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அந்த ரோஜா குவியலை கையில் தூக்கினேன்.

   

என் கை பட்டு மெல்ல சிணுங்கினாள் என் குட்டி தேவதை. அதுவே எனக்கு உயிர் வரை வலித்தது.

   

கண்ணில் பட்ட வரிகளை நம்ப முடியாமல் மீண்டும் மீண்டும் படித்தாள் ரேஷ்மி...

  

சுமி, குழந்தை என்றால் இதை எழுதி இருப்பது அவளின் அப்பாவா???

   

ரேஷ்மியால் அதற்கு மேல் தன் ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நாகரிகம் எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாவற்றையும் மறந்து, முதல் பக்கத்தை திறந்து படிக்க தொடங்கினாள்.

   

அது டைரி என்றாலும், தினம் தினம் நடந்த சம்பவங்கள் அதில் எழுத பட்டிருக்கவில்லை.

   

கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் தொகுப்பாக எழுதப் பட்டு இருந்தது.

   

அம்மா படிக்கட்டில் இருந்து விழுந்து விட்ட அதிர்ச்சியில் இருந்து மீளாமலே, அவசர அவசரமாக டாக்டர் ஹேமா கிளினிக்கில் அட்மிட் செய்தேன்.

   

அங்கே ட்ரீட்மென்ட் மற்றும் இன்சுரன்ஸ்கென கையெழுத்து போட என்னிடம் கொடுக்கப் பட்டிருந்த பேப்பர்களை ஃபிரன்ட் டெஸ்கில் கொடுக்க எடுத்து சென்ற போது என் மீது வந்து மோதிக் கொண்டாள் அவள்.

   

2 comments

  • Oh my God sis 🥹🥹🥹 don't know something I feel very heavy in heart when I read this, please update next episode ASAP, love your writing a lot especially this story 💗💗💗 thanks for the wonderful creation 🙏🏻🙏🏻🙏🏻

    • Aww, that means so much to me! 💗 I'm so happy to hear that this story touched your heart. Your support and love truly motivate me! I'll work on the next episode ASAP. Thank you for your kind words! 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.