(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

பூக்காரம்மாவின் கூடையில் இருந்த மொத்த பூக்களுமே என் மேல் விழுந்தது போல இருந்தது.

   

ஆனாலும் அவள் பக்கம் பார்க்க மனம் வராமல் கையிலிருந்து கீழே விழுந்த பேப்பர்களை நான் எடுத்து அடுக்க, அவளும் எனக்கு உதவி செய்தாள்.

   

திடீரென, “ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க???” என அவள் கேட்க, எனக்கு தலை சுற்றி தான் போனது.

   

ஆனாலும் அவளை பார்க்க கூடாது என்ற வைராக்கியத்துடன் அவளை பார்க்காமலே, அம்மாவிற்கு அடிப்பட்ட விபரத்தை சொல்லி விட்டு நான் என் வேலையை தொடர,

   

“அவங்களுக்கு ஒன்னும் ஆகாது... கவலைப் படாதீங்க.... நீங்க டென்ஷன் ஆகாமல் இருங்க...” என்றாள் அவள்.

   

எனக்காக பேசுகிறாளே....!

   

இந்த முறை என்னால் மனதை அடக்க முடியவில்லை... நிமிர்ந்து அவளை பார்த்தேன்...

   

முழுநிலவை போன்ற வட்டமான அழகிய முகம். கண்கள் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருந்தன...

   

மிகவும் பரிச்சயமாக தோன்றிய அந்த முகம் அப்படியே என் மனதில் ஒட்டிக் கொண்டது.

   

கண் இமைக்காமல் அவளையே பார்த்து ரசிக்க வேண்டும் என்று எழுந்த ஆர்வத்தை நாகரிகம் கருதி அடக்கி, அவளுக்கு நன்றி மட்டும் சொல்லி விட்டு பார்வையை திருப்பினேன்.

   

கீழே மிச்சமிருந்த பேப்பர்களை எடுத்து விட்டு அவளிடம் இருந்த பேப்பர்களை கேட்டு கையை நீட்டினால், அவள் எதற்கு கையை நீட்டுகிறேன் என்று புரியாமல் என்னை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்தாள்...

2 comments

  • Oh my God sis 🥹🥹🥹 don't know something I feel very heavy in heart when I read this, please update next episode ASAP, love your writing a lot especially this story 💗💗💗 thanks for the wonderful creation 🙏🏻🙏🏻🙏🏻

    • Aww, that means so much to me! 💗 I'm so happy to hear that this story touched your heart. Your support and love truly motivate me! I'll work on the next episode ASAP. Thank you for your kind words! 💕✨

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.