அவனின் விறுவிறு நடையை ரசனையுடன் பார்த்தப் படி நின்றாள் சினேகா... அவன் கண்ணில் இருந்து மறையும் வரை அங்கேயே அசையாமல் நின்றிருந்தாள்...
பின், மனமே இல்லாமல் திரும்பியவள், காலில் எதுவோ படவும் குனிந்துப் பார்த்தாள்...
அங்கே ஒரு சிவப்பு ரோஜாப்பூ இருந்தது...
ஆகாஷ் கையில் வைத்திருந்த பொக்கே நினைவுக்கு வரவும், இந்த பூ அவனுடையது என்பது சினேகாவிற்கு புரிந்தது...
இந்நேரம் கார் பார்க்கிங்கிற்கு தான் சென்றிருப்பான்... எடுத்துக் கொண்டு போய் கொடுக்கலாமா என்று யோசித்த மனதை உடனேயே அடக்கினாள்...
அந்த ரோஜாவை கையில் எடுத்து மெல்ல வருடினாள்...
ஆகாஷின் கைப் பட்ட ரோஜா அல்லவா, சிநேகாவிற்கு அது மிக மிக மிக மிருதுவானதாக தோன்றியது...
பத்திரமாக ரோஜாவை கையில் எடுத்துக் கொண்டு, துப்பட்டாவில் மறைத்து தன் சீட்டிற்கு சென்றவள், பக்கத்தில் இருந்தவர்கள் ஒருவருக்கும் தெரியாமல் பூவை ரகசியமாக டேபிள் ட்ராயரை திறந்து உள்ளே வைத்தாள்...!
மேஜையை மூடும் முன் மீண்டும் அந்த பூவை கண்களால் ரசித்தாள்...
அன்று முதல் அவளின் அந்த சின்ன டேபிள் ட்ராயர் அவளுடைய ஸ்பெஷல் treasure ஆக மாறிப் போனது...!
✽✽✽
“என்ன ஆகாஷ் இவ்வளவு லேட்???” என்றுக் கேட்ட சுபாஷினியின் முன் மேற்கத்திய