பாணியில் குனிந்து கையில் இருந்த ரோஜா பூங்கொத்தை நீட்டினான் ஆகாஷ்.
“ஹாப்பி மதர்ஸ் டே ம்மா”
“அப்போ மத்த நாள்லாம் என்ன டே ஆகாஷ்?” என்று கேலி செய்த பிரகாஷை கண்டுக் கொள்ளாமல் முகம் மலர மகன் கொடுத்த பூங்கொத்தை பெற்றுக் கொண்டாள் சுபாஷினி.
“எல்லா பூவும் அழகா இருக்கு. அதும் எனக்கு பிடிச்ச ரெட் கலர் ரோஸஸ். கலக்கிட்டேடா கண்ணா...”
“ஐ ஆம் ஆல்வேஸ் அட் யுவர் சர்வீஸ் ம்மா...”
“அடடா... ரொம்ப ஓவர் சீன் போடுறீங்க ரெண்டுப் பேரும்,” என பொய்யாக அலுத்துக் கொண்டார் பிரகாஷ். அதை புரிந்துக் கொண்டாலும், காட்டிக் கொள்ளாமல்,
“நானும் என் பையனும் செல்லம் கொஞ்சினா உங்களுக்கு என்ன பொறாமை?” எனக் கேட்டு கணவரை சீண்டினாள் சுபாஷினி.
பிரகாஷும் விட்டுக் கொடுக்காமல்,
“ஏதோ புதுசா ஒன்னு நடந்து இப்படிலாம் பேசினா சரி! அவன் உன் பிறந்த நாள், நம்ம கல்யாண நாள்ன்னு எல்லாத்துக்கும் உனக்கு பிடிச்ச ரெட் ரோஸ் தான் வாங்கி தரான்... நீயும் இதே டையலாக் ரிபீட் செய்ற. கேட்டு கேட்டு எனக்கு தான் போரடிச்சிருச்சு,” என்றார்.
“உங்களுக்கு போரடிக்குதுன்னா நீங்க காதை மூடிக்கோங்க... பொறாமை படாதீங்க,” என சுபாஷினி சொல்ல,
“அதானேப்பா, நீங்க காதை மூடிக்கோங்க....! நோ பொறாமைஸ்,” என ஆகாஷும் சொன்னான்!
“அம்மாவும், பையனும் ஒரு சைடா மாறிட்டீங்க! இப்போ நான் என்ன சொன்னாலும்