Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 53 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சிதம்பரமும் இரவு முதல் விடியும் வரை பல ஸ்டேஷன்களுக்குச் சென்று தில்லையை பற்றியும் சம்யுக்தா மற்றும் தில்லையின் அடியாட்கள் பற்றியும் சிவாவை பற்றியும் விசாரிக்கலானான்.
அவனது கடின உழைப்புக்கு பலனும் கிடைத்தது, அந்தத் தகவல்களை பத்திரப்படுத்திய சிதம்பரமும் நிம்மதியாக தனது வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான்.
காலை மணி 10, கான்ஸ்டபிளே சிதம்பரத்தை தேடிக்கொண்டு அவனுக்கென்று கொடுத்திருந்த போலீஸ் குவார்ட்டர்ஸ் வீட்டின் முன் நின்றார்
”சார் சார்” என அழைத்தபடியே காலிங்பெல் அடிக்க தூக்க கலக்கத்துடனே சிதம்பரம் கதவைத் திறந்தான்
”நீயா உள்ள வாய்யா”
”சார் ஒரு சின்ன பிரச்சனை“
”என்ன பிரச்சனை”
”அந்த பொண்ணுதான் சார் பிரச்சனையே”
“ஏன் அவங்களுக்கு என்னாச்சி, நல்லாதானே இருக்காங்க“
”இருக்காங்க சார், அந்தப் பொண்ணு காலையில 9 மணிக்கே போலீஸ் ஸ்டேஷன் வந்துடுச்சி சார், நீங்க இல்லைன்னு சொல்லியும் கேட்காம காத்திருக்க ஆரம்பிச்சது, நீங்க வேற அவங்களை ஸ்டேஷனுக்குள்ள விடக்கூடாதுன்னு சொன்னீங்கள்ல, அவங்களைத் தேடி ஓட்டலுக்கே போலாம்னு சொன்னீங்கள்ல, அந்த விசயத்தையும் நான் அந்தப் பொண்ணுகிட்ட சொன்னேன் சார்“
”அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க”